ADDED : ஏப் 11, 2025 12:10 AM

காற்றாலை மின்சாரம்
*இந்தியாவின் காற்றாலை நிறுவுதல் திறன் 50 ஜிகாவாட்டை தாண்டியுள்ளது
*காற்றாலை அதிகம் நிறுவியுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்
*கடந்த நிதியாண்டில் மட்டும் புதிதாக 4,151 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன
*இதற்கு முன் அதிகபட்சமாக 2016 - 17ம் நிதியாண்டில் 5,400 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டன
*காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம், குஜராத் மாநிலங்களிலேயே அதிகளவிலான காற்றாலைகள் நிறுவப்படுகின்றன
சூரிய சக்தி மின்சாரம்
*20 ஆண்டு காலம் காற்றாலை மின்சார உற்பத்தியே முன்னிலையில் இருந்து வந்தது.
*2010ம் ஆண்டுக்குப் பிறகு, சூரிய சக்தி மின்சார உற்பத்தி மீதான மோகம் அதிகரித்தது.
*காற்றாலைகள் போல அல்லாமல், எங்கு வேண்டுமானாலும் நிறுவக் கூடிய வசதி இருந்ததால் வரவேற்பு
*இதனால் சூரிய சக்தி மின்சார நிறுவுதல் திறன் விரைவிலேயே 100 ஜிகாவாட்டை எட்டியது.
காற்றாலை நிறுவுதல் (திறன், மெகாவாட்டில்)
முன்னிலை வகிக்கும் மாநிலங்கள்
குஜராத் 12,677
தமிழகம் 11,739
புதிய காற்றாலைகளின் திறன்
(2024-25)
கர்நாடகா 1,331
தமிழகம் 1,136

