இரண்டரை மாதத்தில் ஆறே கார்கள் வின்பாஸ்ட் நிறுவனம் விற்பனை
இரண்டரை மாதத்தில் ஆறே கார்கள் வின்பாஸ்ட் நிறுவனம் விற்பனை
ADDED : அக் 02, 2025 11:04 PM

புதுடில்லி : வின்பாஸ்ட் கார்கள் கடந்த செப்டம்பரில் ஆறு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக, 'வாகன்' தரவுகளில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், கடந்த ஜூலை 15ல் முதல் கிளையை மும்பையில் துவங்கியது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், துாத்துக்குடியில் அமைத்துள்ள தன் தொழிற்சாலையில் தயாராகும் தனது வி.எப்., 6, வி.எப்., 7 ரக மின்சார கார்கள் முன்பதிவை அதே நாளில் துவங்கியது.
இந்நிலையில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் டிஜிட்டல் வாகனப்பதிவு தளமான வாகனில், கடந்த அக்., 1ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் மொத்தம் 60 டெஸ்லா கார்களும், ஆறு வின்பாஸ்ட் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாகன விற்பனைக்கு பிந்தைய சேவை அளிப்பது தொடர்பாக, கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்துடன் வின்பாஸ்ட் ஆட்டோ இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.