தமிழகத்தில் 'ஸ்டார்ட் அப்' ஆர்வம் காட்டும் பெண்கள்
தமிழகத்தில் 'ஸ்டார்ட் அப்' ஆர்வம் காட்டும் பெண்கள்
UPDATED : ஜூலை 17, 2025 12:20 AM
ADDED : ஜூலை 17, 2025 12:19 AM

தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை துவக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது, இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை முடிக்கும் பட்டதாரிகளில் பலர், நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு பதில், புத்தொழில் துவக்குகின்றனர். மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தொழில் துவக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
![]() |
தென் மாவட்டங்களில் குறைவு ஏன்?
ஸ்டார்ட் அப் தொழில் துவங்குவதற்கான அனைத்து வசதிகளும் முன்பு தலைநகரத்தில் மட்டுமே இருந்தது. இதனால் தென் மாவட்டங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தொழில் துவங்குவதை அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன், 100 ஸ்டார்ட் அப்கள் இருந்தால் அதில் சென்னையின் பங்கு, 70 சதவீதமாக இருந்தது. தற்போது, 45 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் துவக்கப்பட்டு வருவதே காரணம். வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
![]() |
முன்னணி 10 துறைகள்
• தகவல் தொழில்நுட்பம்
• ஆரோக்கிய பராமரிப்பு
• வேளாண் பொருட்கள்
• உணவு / குளிர்பானம்
• கல்வி
• கட்டுமானம்
• வர்த்தக சேவைகள்
• டெக்னாலஜி ஹார்டுவேர்
• புதுப்பிக்கத்தக்க மின்சாரம்
• மோட்டார் வாகனம்


