தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஜூலை 27, 2026 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 12:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு: என்னங்க டவுனு இப்படி பண்ணீட்டீங்க?

டவுனு: அட! நானே எதிர்பார்க்கலீங்க. இப்படி நடக்குமுன்னு. இன்னைக்கு முடிஞ்சிடும் நாளைக்கு முடிஞ்சிடுமுன்னு நினைச்சு ஏமாந்தது தான் மிச்சம். அஞ்சு நாளும் தொடர் இறக்கமாவே போயிடுச்சு.

நியுட்ரன்: வணக்கங்க டவுனு சார். இதை ஒரு பேச்சுக்கு சொல்றீங்களா? இல்ல நிஜமாவேதானா?

டவுனு: இறங்குனத என்னோட சாதனைன்னு சொல்லி பெருமைப்பட்டாலும் எதிர்பாராத இறக்கம் அப்படீங்கறத ஒத்துக்கத்தான் வேணும் நியுட்ரன்.

அப்பு: அப்படி என்ன மோசமா இருக்கு நிலைமை?

நியுட்ரன்: போர் சம்பவங்களும் அது குறித்த செய்திகளும் தான் காரணம்.

டவுனு: மொத்தம் 566 புள்ளிகள் தொடர் இறக்கம் 659 புள்ளிகள் வரையிலான வாரந்திர 'ஸ்விங்'. இதை பார்த்தாதான் பயமா இருக்கு.

நியுட்ரன்: பயமா! உங்களுக்கா? அது எனக்குன்னு பட்டா போட்டு கொடுத்த ஒரு விஷயமாச்சே!

அப்பு: நீங்க பட்டா வச்சுருக்கீங்க. அவர் கொஞ்ச நாள் வாடகைக்கு குடியிருந்துட்டு போயிடுவார். சும்மா பயம் பயமுன்னு பயங்காட்டாதீங்க நியூட்ரன்.



நியுட்ரன்: வர்ற வாரத்துல 'இண்டஸ்டிரியல் புரொடக்ஷன், மேனுபேக்சரிங் புரொடக்ஷன், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற நாட்டின் பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது. 'டியுரபிள் குட்ஸ் ஆர்டர்கள், ஹோல்சேல் இண்வென்டரிஸ், எஸ் அண்டு பி.,/கேஸ்-ஷில்லர் வீட்டு விலைகள், சி.பி., கன்ஸ்யூமர் கான்பிடன்ஸ், பெடரல் ரிசர்வ்வின் வட்டி விகித முடிவுகள், கோர் பி.சி.இ., இண்டெக்ஸ், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், பெர்சனல் இன்கம், பெர்சனல் ஸ்பென்டிங், ஜாப்லெஸ் க்ளெம்ஸ், மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமெண்ட்' போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.



டவுனு: ஜூலை மாத எப் அண்டு ஓ., எக்ஸ்பைரி, அமெரிக்க வட்டிவிகித முடிவுகள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களோட காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்குது. சூப்பரா இருக்கப்போகுது இந்த வாரமுன்னு சொல்லுங்க.



அப்பு: போன வாரம் பூராவும் உங்க இராஜ்ஜியமா இருந்துச்சா. ஆனா எப் அண்டு ஓ எக்ஸ்பைரி இருக்கறதால நிலைமை இந்த வாரம் எப்படி வேண்டுமென்றாலும் போகலாம்.



நியுட்ரன்: இருங்க சப்போர்ட் ரெசிஸ்டென்ஸை சொல்லி முடிச்சுடறேன். 23,494/23,220/22,968 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24,154/24,540/24,792 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 23,880-தான் மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்புமுனை லெவலா இருக்கும்.



அப்பு: வர்ற வாரம் எப்படிஇருக்குமுன்னு சொல்லுங்க டவுனு.

டவுனு: குழப்பமாத்தான் இருக்க வாய்ப்பிருக்கு. என் சின்ன வயசுல ஊருல இருக்கற எங்க கொள்ளுப்பாட்டி எதுக்கெடுத்தாலும் குழப்பம் கூத்தடிக்குதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கும். அந்த வயசுல ஏன் இந்த பாட்டி இப்படி புலம்புதுன்னு புரியல. இப்பத்தான் புரியுது.

நியுட்ரன்: கரெக்ட்தான்

அப்பு: குழப்புறதும் நல்லதுக்குத்தான்

நியுட்ரன்: இதென்ன புதுசா இருக்கு!

டவுனு: ஏற்றம், இறக்கம், சைடுவேய்ஸ் மாதிரி குழப்பமுங்குறதும் ஒரு நிலையா சந்தையில உருவாகியிட்டு இருக்கு..



நியுட்ரன்: செய்திகள் கணப்பொழுதில் உலகம் பூரா சென்றடையிறதாலயும், செய்திகள் குறித்த அனாலிசிஸ்களும் உடனுக்குடன் வந்துடறதாலயும்தான் குழப்பம் உருவாகுது.

டவுனு: உடனுக்குடன் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். ஆனா சந்தையின் போக்கில் குழப்பம் இருக்கக்கூடாதுன்னு ஆசைப்பட்டா அது சாத்தியமில்லை.

நியுட்ரன்: ரொம்ப சரிங்க.

அப்பு: பேச்சுல மறந்துடாதீங்க. வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு சொல்லுங்க?

நியுட்ரன்: ஆமாம். மறந்துடாதீங்க.



அப்பு: சொல்லாமப்போயிட்டீங்கன்னா இந்த வாரம் நியூட்ரனோட வியாபாரம் பாதியளவாயிடும்.



நியுட்ரன்: ரொம்ப நேரமாச்சே கிண்டல் இல்லாம போகுதேன்னு நினைச்சேன்!



டவுனு: நியுட்ரன் ஒரு வாரம் ஊருக்கு போகலாம். லீவு. ஏன்னா 'வாலட்டைலிட்டி' அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு.

நியுட்ரன்: ஆமாம். எக்ஸ்பைரி, வட்டிவிகிதம், காலாண்டு முடிவுன்னு வாலட்டைலிட்டுக்கு தேவையான அத்தனை மூலப்பொருளும் இருக்குது. அதனால நான் ஊருக்கு போகத்தான் போறேன்.

அப்பு: சென்று வென்று வாங்க

டவுனு: மறக்காம உங்க ஊர்ல பேமாஸான போளி வாங்கிட்டு வாங்க.

அப்பு: அப்படியே வர்றப்ப வழியில முடிஞ்சா காரசேவும் வாங்கிட்டு வந்துடுங்க.



நியுட்ரன்: ஓ.கே., இப்ப வாங்க ஒரு ஸ்ட்ராங் காபி சாப்பிடலாம் என்று அழைக்க மூவரும் காபி கடையை நோக்கி புறப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us