/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
பயணியர் வாகன விற்பனை 6% உயர்வு
/
பயணியர் வாகன விற்பனை 6% உயர்வு
ADDED : ஜன 02, 2026 12:55 AM

புதுடில்லி:கடந்த ஆண்டில், பயணியர் வாகன விற்பனை 6 சதவீதம் அதிகரித்து, 45.50 லட்சமாக இருந்ததாக வாகனத்துறை புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜி.எஸ்.டி., 2.O அறிவிக்கப்பட்டு, வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் அதிகரித்த வாகன விற்பனை, ஆண்டு இறுதி வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள்நாட்டு வாகன நிறுவனங்களான மாருதி சுசூகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றின், பயணியர் வாகன ஆண்டு விற்பனை வரலாறு காணாத உயர்வு கண்டது.
குறிப்பாக, எஸ்.யு.வி., விற்பனை, மொத்த பயணியர் வாகன விற்பனையில் 56 சதவீத இடம்பிடித்தது. முந்தைய ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது.
கடந்த 2025ல் 18.44 லட்சம் பயணியர் வாகன விற்பனையுடன் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் முதலிடம் பிடித்தது. முந்தைய ஆண்டில் இந்நிறுவனம் 17.90 லட்சம் வாகனங்களை விற்றிருந்தது.

