sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (19)

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (19)

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (19)

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (19)

1


UPDATED : அக் 15, 2024 08:44 AM

ADDED : அக் 14, 2024 01:43 AM

Google News

UPDATED : அக் 15, 2024 08:44 AM ADDED : அக் 14, 2024 01:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.

'தினமலர்' செய்தி எதிரொலி வரி குறைப்புக்கு பரிந்துரை


நமது நாளிதழில் 'ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை' தொடரில், கடந்த ஆக., 19ம் தேதி, போர்வெல் தொழிலில் உள்ள ஜி.எஸ்.டி., பிரச்னை குறித்து பிரசுரமாகியிருந்தது.

இந்த செய்தியை இணைத்து, மதுரை மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர்கள் மற்றும் ஏஜன்டுகள் நலச்சங்கம், மதுரை மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறை ஆணையரகத்துக்கு வரி குறைப்பு வேண்டி கோரிக்கை விடுத்திருந்தது.

'லாரி தொழிலில், அவர்கள் வழங்கும் சேவைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. போர்வெல் லாரிகளின் முக்கிய செலவினமாக டீசல் உள்ள நிலையில், போர்வெல் சேவைக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இரு சேவைகளுமே டீசலை நம்பி உள்ள நிலையில், போர்வெல் தொழிலுக்கு கூடுதல் வரி என்பது பாகுபாடாக உள்ளது.

மேலும், டீசல் செலவினத்தை, போர்வெல் தொழிலில் உள்ளீட்டு வரியாக காண்பிக்க இயலாது. எனவே, போர்வெல் லாரிகளுக்கு ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இது, எங்களின் பெரும் நிதிச்சுமையைக் குறைக்கும்' என்ற இக்கோரிக்கை குறித்து பரிசீலிக்கும்படி, ஜி.எஸ்.டி.,யின் கொள்கை குறித்த முடிவுகளை எடுக்கும் பிரிவுக்கு, மதுரை ஜி.எஸ்.டி, ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. “எங்களின் கோரிக்கையை, 'தினமலர்' இதழில் வெளியான செய்தியோடு இணைத்து, மதுரை ஜி.எஸ்.டி., ஆணையரகத்துக்கு அனுப்பி னோம். அவர்கள் கொள்கை முடிவெடுக்கும் பிரிவுக்கு பரிந்துரை செய்திருப்பது, எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது”.

- சுரேஷ் பாலசுப்பிரமணியம்,

துணைத்தலைவர்,

தமிழ்நாடு போர்வெல் உரிமையாளர்கள் சம்மேளனம்.

ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.



முகவரி:


ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!

தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,

சுந்தராபுரம்,

கோவை - 641 024.






      Dinamalar
      Follow us