sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை (11)

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை (11)

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை (11)

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை (11)


ADDED : செப் 24, 2024 09:54 AM

Google News

ADDED : செப் 24, 2024 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.எஸ்.டி., கணக்குகளை சமர்ப்பிக்க, நோட்டீஸ் அனுப்பும்போது அலைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்புகின்றனர்.

மின்னஞ்சலை பயன்படுத்தத் தெரியாதவர்கள், ஆங்கிலம் புரியாதவர்களுக்கு இது சிரமமாக உள்ளது. மூன்று முறை நோட்டீஸ் அனுப்பிய பிறகும் பதில் வராவிட்டால், அதிகாரிகள் அபராதம் விதித்து ஆணை பிறப்பிக்கின்றனர். அதனால் பழைய முறைப்படி 2 முறை பதில் வராவிட்டால், மூன்றா வது முறை பதிவுத் தபாலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

* ரூ. 1 கோடி வரை விற்பனை உள்ளவர் களுக்கு, வரி தாக்கல் படிவங்களை காகிதத்தில் நேரிலேயே தாக்கல் செய்யும் முறையை அமல்படுத்தலாம். ஏனெனில் ஒருங்கிணைந்த வரி (காம்போசிசன்) 1 சதவீதம் செலுத்து வோருக்கும், மளிகைக் கடைகள் போன்றவற்றுக்கும் சில பொருள்களுக்கு மட்டுமே வரி உள்ளது. கணக்குப்பதிவியல் அறிவும், கம்ப்யூட்டர் இயக்கும் திறனும் அனைவருக்கும் இருக்காது என்பதால், ஆடிட்டரின் உதவியை நாட வேண்டியுள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.500 முதல் ரூ.2,000 வரை கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே, இ- சேவை மையம் வழியாக தாக்கல் செய்ய வகை செய்யலாம். வரியை ரொக்கமாக நேரிலோ அல்லது வங்கிகளிலோ, அஞ்சலகங்களிலோ சலானில் நாங்களே நேரடியாக பூர்த்தி செய்து செலுத்த ஏற்பாடு செய்யலாம்.

* பொருள்களுக்கான வரி விகிதங்கள் குறித்து, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பட்டியல் உள்ளது. இதனை மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

* வரி பற்றி நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அறிவிக்க வேண்டும். உதாரணமாக, எடைகள் சட்டம் 2009 மற்றும் பொட் டலமிடுதல் விதிகள் 2011ன் படி, பொட்டலமிடாத பொருள்களுக்கு வரி இல்லை என, 2022 ஜூலை 18ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இதனை, 25 கிலோ வரை பேக் செய்து விற்றால் வரி, உதிரியாக விற்றால் வரி இல்லை என ஜி.எஸ்.டி., கவுன்சில் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.

* பொதுவாக சேவை பெறுபவர்தான் வரி செலுத்த வேண்டும். லாரியில் பொருள் அனுப்பும்போது, அனுப்புபவர் வாட கையை முன்கூட்டியே கட்டிவிட்டால், அவரே அதற்கு ஜி.எஸ்.டி.,யும் கட்ட வேண்டும். உணவுப் பொருட்களை அனுப்பும் போது, உரிமையாளர்கள் முன்பணமாகவே வாடகை கேட்கின்றனர். எனவே, இதற்கான வரியை, சரக்குகளைப் பெறுபவரே ஏற்கும் படி மாற்ற வேண்டும்.

கா.சந்திரசேகர், மளிகை வியாபாரம், கோவை

ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.



முகவரி

:

ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!

தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
சுந்தராபுரம்,
கோவை - 641024.
Email: dmrgstviews@dinamalar.in








      Dinamalar
      Follow us