/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை (12)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை (12)
ADDED : செப் 24, 2024 10:02 AM

ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், திங்கள் மற்றும் செவ்வாய்தோறும் 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
ஜி.எஸ்.டி., பதியாத பில் இல்லாத வர்த்தகம் கண்ணுக்குத் தெரிவதில்லையா?
ஜி.எஸ்.டி., குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. முறையற்ற ஜி.எஸ்.டி., அலுவலர்களாலும், அவர்களின் அணுகுமுறையாலும் நேர்மையாக வணிகம் செய்யும் வியாபாரிகள் 90 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
முறையாக மாதா மாதம் ஜி.எஸ்.டி., எண் மூலம் உள்ளீடு செய்து வியாபாரம் செய்யும் கடை கள், நிறுவனங்கள் மீது மட்டுமே ஜி.எஸ்.டி., அலுவலர்கள் ஆய்வு நடத்துவர். முறையற்ற வியாபாரி களை ஜி.எஸ்.டி., அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.
ஒரு பகுதியில் 1,000 கடைகள் இருந்தால், அங்கு ஜி.எஸ்.டி., பதிவுடன் நேர்மையாக வணிகம் செய்யும் சிறு கடைகள் மட்டுமே ஜி.எஸ்.டி., அதிகாரிகளின் கண் களுக்குத் தெரியும். அதே இடத் தில், ஜி.எஸ்.டி., பதிவு இல்லா மல், கோடிக்கணக்கில் வணிகம் செய்து லட்சக்கணக்கில் சம்பா திக்கும் முறையற்ற வணிகர்களை ஜி.எஸ்.டி.,அலுவலர்கள் கண்டுகொள்வதே இல்லை.
ஜி.எஸ்.டி.,எண் இருக்கிறதா இல்லையா என்பது போன்ற குறைந்தபட்ச சோதனைகள் கூட செய்வதில்லை. ஜி.எஸ்.டி., பதிவு செய்யாத கடைகளால் அரசுக்கு வருவாய் இழப்பு. பில் இல்லாத பரிவர்த்தனைகளால், வாடிக்கை யாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் அதிக லாபத்துக்கு பொருட்களை விற்கின்றனர். அதே சமயம் ஜி.எஸ்.டி., பதிவு செய்து முறையாக வர்த்தகம் செய்பவர், சொற்ப லாபத்தில், அரசுக்கும் வரி செலுத்தி, வர்த்தகர்கள் திண்டாடுகின்றனர்.
வாடிக்கையாளர்களும், ஜி.எஸ்.டி., பில்லுடன் வரும் பொருளின் விலையை கூடுதலாக இருப்பதால், நேர்மையான வியா பாரிகளுடன் சண்டையிடுவது தின மும் நடக்கிறது. ஜி.எஸ்.டி., பதிவு செய்யாத கடைகளுக்கு பொருட் கள் எங்கிருந்து வருகிறது என்பது போன்ற ஆய்வுகள் தினசரி நடத்தப் பட வேண்டும்.
ஆளுங்கட்சியினர் ஆதரவு பெற்ற கடைகளை ஜி.எஸ்.டி., அதிகாரி கள் சீண்டிக்கூட பார்ப்பதில்லை. ஜி.எஸ்.டி.,யில் ஒருமுறை மாட்டி யவனை, ஆயுள்தண்டனை கைதி போன்று ஆண்டிற்கு பலமுறை தொல்லைகொடுத்துக் கொண்டே யிருப்பார்கள். அந்த 'பைலை' மூடவும் மாட்டார்கள். அடுத்த டுத்து வரும் ஜி.எஸ்.டி.,அலுவலர் களும் மாட்டிய நிறுவனங்களை பணம்காய்க்கும் மரங்களாகவே பார்க்கின்றனர்.
இந்நிலைமாறி அனைத்துக் கடை களும் ஜி.எஸ்.டி., பதிவு கட்டாய மாக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி., பதியாத கடைகளுக்கு 'சீல்' வைக் கப்பட வேண்டும். இண்டஸ்ட்ரியல் பொருட்களை வாடகைக்கு விடும் கடைகள், ஹார்டுவேர் கடைகள் பெரும்பாலும் ஜி.எஸ்.டி., எண்ணோ வரிசெலுத்தும் முறையோ உபயோ கப்படுத்துவதில்லை. ஜி.எஸ்.டி., பதிவு இருந்தாலும் பெரும்பாலும் பில் இல்லாத பரிவர்த்தனைகளே அதிகமாக இருக்கிறது.
இவர்களின் முறையற்ற வணி கத்தால், நேர்மையான வணி கர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஜி.எஸ்.டி.,யால் பொருட்களை வாங்கி விற்கும் 90 சதவீத நேர் மையான வியாபாரிகள், நேர்மை யற்ற வணிகர்களால் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஜி.எஸ்.டி., அலு வலர்களும் இதனை கண்டுகொள் வதில்லை. முறையற்ற வணிகர் களைக் களையெடுக்க வேண்டும். வரிசெலுத்துவோம்! நாட்டை வளப்படுத்துவோம்!
- ரா.குமரி குசேலன்,சென்னை.