/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (13)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (13)
ADDED : செப் 24, 2024 10:08 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர்.அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
ஐ.டி.சி., மோசடியைத் தவிர்க்க ஒரு முனை வரியே தீர்வு!
ஒவ்வொரு மாத துவக்கத்திலும், முந்தைய மாதத்தின் ஜி.எஸ்.டி., வசூல் குறித்த தகவல் வெளியிடப் படுகிறது. கடந்த ஆக.,ல் ரூ.1.76 லட்சம் கோடி வசூலாகியிருக்கிறது. இந்தத்தொகை முழுக்க ஜி.எஸ்.டி., வரிதான் என பெரும்பாலான மக் கள் எண்ணக்கூடும்.
இந்தத்தொகையில், பொருள் மீதான வரி எவ்வளவு, சேவை மீதான வரி, அபராதம், வட்டி எவ்வளவு என, தனித்தனியே பிரித்துக் காட்டப்படவில்லை. இதைப் பிரித்துக் காட்ட வேண்டும். மேலும், ஒவ்வொரு மாதமும், ஐ.டி.சி., வாயிலாக, துறையை ஏமாற்றி, அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்ற தகவலும் வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு பிரித் துக் காட்டினால்தான், ஒவ்வொரு வணிகருக்கும் பொதுமக்களுக்கும் உண்மை விளங்கும். நேர்மையாக வணிகம் செய்து, முறையாகவும் முழுமையாகவும் வரி செலுத்திய 5 ஆண்டுகளுக்குப் பின்பு, வரி, அப ராதம் மற்றும் வட்டியும் செலுத்தும் படி நோட்டீஸ் வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., துறையின் முழு கவன மும் நேர்மையான வணிகரிடம் வரி, அபராதம் மற்றும் வட்டி வசூலிப்ப தில்தான் இருக்கிறது.
நேர்மையான வணிகரிடம் வசூலிக்கும் தண்டத்தொகையைப் போல பல மடங்கு மோசடி செய் யும் சமூக விரோதிகளிடம், அரசு தன் வருவாயை இழந்து வருகிறது. வணிகர்களின் கோரிக்கையில் முதன்மையானது, மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருட்கள் அனைத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். வரிக்கு உட்படுத்தப்படும் இதர பொருள்கள் அனைத்துக்கும் ஒரு முனை வரி மட்டுமே விதிக்க வேண் டும். அதாவது ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் முதல் விற் பனையின்போதே வரி வசூல்செய்ய வேண்டும். இதைப் பின்பற்றினால் மட்டுமே, பெரும்பாலான மாநிலங்களில் நிகழும் ஐ.டி.சி., மோசடி அறவே ஒழியும்.
ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்ட 2017 ஜூலை 1 முதல் இதுவரை, நூற்றுக்கணக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகிலேயே மிகக் கொடுமையான சட்டம் ஜி.எஸ்.டி.,தான். இதற்கு இதுப் இன்வாய்ஸ் முறையே உதாரணம். கடந்த 2020 அக்., 1 அன்று, மொத்த விற்பனை ரூ.500 கோடியைத் தாண்டினால், அவர்கள் தங்கள் விற்பனை பில்களை இ- இன் வாய்ஸ் ஆக உருவாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. பின்னர், 2021 ஜன., 1ம் தேதி, இந்த வரம்பு ரூ.100 கோடியாகவும், 2021 ஏப்., 1ம் தேதி ரூ.50 கோடியாகவும், 2022 ஏப்., 1ம் தேதி ரூ. 20 கோடியாகவும், 2023 ஆக., 1ம் தேதி ரூ.5 கோடியாகவும் மாற்றம் செய்யப்பட்டது.
இதுவரை, சரக்கு வாங்குவோர் மறு விற்பனை செய்யும் வணிகராக இருந்தால் மட்டுமே (பி டூ பி), இ - இன்வாய்ஸ் கட்டாயம் என்று இருக்கிறது. தற்போது, சரக்கு வாங்குபவர் நுகர்வோராக இருந்தாலும் (பி டூ சி) இ-இன்வாய்ஸ், கட்டாயம் என, அமல்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வணிக சமுதாயம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அடுத்து, ஆண்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.5 கோடி என்பதை படிப்படியாகக் குறைத்து, ரூ. 1 கோடியாக கூட மாற்றலாம். தற்போதுள்ள பண வீக்கத்தைக் கணக்கிடும்போது, சாதாரண வணிகரின் ஆண்டு விற்பனைத் தொகை மிக எளிதாக ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை கடந்து விடும். அவர்கள் தங்கள் விற்பனை பில்லை இ-இன்வாய்ஸ் ஆக உருவாக்க முடியுமா என்பதை துறை அதிகாரிகளும், அமைச்சரும் சிந்தித் பார்க்க வேண்டும். எனவே, *இ இன்வாய்ஸ் என்பதை ரூ. 5 கோடியில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது. பிடூசி இ-இன்வாய்ஸ் முறையை அமல்படுத்தக் கூடாது. *பிடூசிக்கு இ-இன்வாய்ஸ் கூடாது என்பதுடன் பொருள் வாங்கு பவரின் ஆதார் அல்லது பான் எண் கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்தக் கூடாது. *பி டூ சிக்கு, வரி வி விலக்குப் பெற்ற பொருள்களில் 'பில் ஆப் சப்ளை' விற்பனைக்கும் ஆதார், பான் எண்ணை கட்டாயப்படுத் தக்கூடாது.
எஸ். சதீஷ்குமார், தலைவர், சிதம்பரம் வர்த்தகர் சங்கம்.