/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (14)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (14)
ADDED : செப் 24, 2024 10:13 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
விடுதியுடன் இணைந்த உணவகங்களில் ஜி.எஸ்.டி., முரண்பாடுகளை நீக்குங்க
தனியாக இயங்கும் அனைத்து வகை உணவகங்களுக்கும், அனைத்து வகை யான உணவு மற்றும் தேநீர் போன்றவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப் படுகிறது.
ஆனால், தங்கும் விடுதியுடன் கூடிய உணவகங்களில், உணவு மற்றும் தேநீர் போன்றவற்றுக்கு விடுதி அறைக ளுக்கு நிர்ணயிக்கப்படும் வாடகைக்கு ஏற்ப உணவுகள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரி விகிதமும் 5 அல்லது 18 சதவீதம் என மாறுவதால், வாடிக் கையாளர்கள் சந்தேகம் அடைகின்றனர். அத்துடன் அவர்களுக்கு வரிச்சுமையும் ஏற்படுகிறது.
இன்றைய கால கட்டத்தில், நடுத் தர வசதியுடன் கூடிய ஓட்டல்களில் உணவருந்தும் வசதிகள் உள்ளன. அந்த வகையான விடுதிகளில் ஏதேனும் ஓர் அறை, குடும்பத்துடன் தங்கும் வசதியுடன் அமைக்கப்பட்டிருப்பதாகக் கொள்வோம்.
அங்கு, திருவிழா மற்றும் சுபமுகூர்த் தம் போன்ற ஏதாவதொரு நாளில், அந்த அறையின் வாடகை ரூ. 7,500க்கு மேல் இருந்தால், அந்த விடுதியில் இயங்கும் உணவகத்தில் உணவு, தேநீர் போன்ற வற்றின் ஜி.எஸ்.டி., வரி 18 சதவீதமாக வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதி. இதனால், வாடிக்கையாளர்கள் சந்தே கமடைந்து, கேள்வி எழுப்புகின்றனர். இது சிக்கலை உருவாக்குகிறது.
மேலும், தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, சில குறிப்பிட்ட நாட்களில், தங்கும் விடுதிகளில், சூழலுக்கேற்ற விலை மாறுபாடு' (டைனமிக் பிரைஸ்) நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் உணவகங்களுக்கு, வெவ்வேறு தினங்களில், வெவ்வேறு வகையான வரிவிதிப்பு என்பது ஏற்புடையதல்ல. இது வாடிக்கையாளர்களுக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, அனைத்து வகையான தங்கும் விடுதியில் செயல்படும் உணவகங்களில், உணவு மற்றும் தேநீருக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக சீராக விதித்தால் சிறப்பாக இருக்கும். இதனால், பொதுமக்களுக்கும் பணம் சேமிப்பாகும்.
விடுதியுடன் கூடிய உணவகங்களுக்கு, தனியாக இயங்கும் அனைத்து வகை உணவகங்களில் உள்ளது போன்றே 5 சதவீத ஜி.எஸ்.டி., நிர்ணயம் செய்ய வேண்டும். தங்கும் வசதியுடன் கூடிய உண வக உரிமையாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.
-எம். வெங்கடசுப்பு, தலைவர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்.