ADDED : டிச 05, 2025 01:25 AM

அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 13,121 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக என்.எஸ்.டி.எல்., வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, நடப்பாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தம் 1.56 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர்.
ஆண்டு இறுதியை முன்னிட்டு, அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு திட்டங்களை மாற்றியமைத்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நடப்பாண்டில், சர்வதேச அளவில் அதிகம் வீழ்ச்சி கண்ட நாணயங்களில் ஒன்றாக இந்திய ரூபாய் இருப்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதும், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியா - அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் தொடர்ந்து நிலவும் தாமதமும், முதலீட்டாளர்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

