ADDED : டிச 29, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பாண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள், 1.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக என்.எஸ்.டி.எல்., வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ல், 1,65,769 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், இந்தியா -- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தாமதம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பங்குகள் அதிக மதிப்பு ஆகியவை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற காரணமாக கூறப்படுகிறது.
அதே சமயம், நடப்பாண்டில் இதுவரை, பல்வேறு கடன் பத்திரங்களில், 59,390 கோடி ரூபாயை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

