தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ புதிய உச்சம் தொட்ட 2 வங்கி பங்குகள்

 புதிய உச்சம் தொட்ட 2 வங்கி பங்குகள்

 புதிய உச்சம் தொட்ட 2 வங்கி பங்குகள்


ADDED : பிப் 19, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியன் வங்கி

சென்னையை தலைமையிடமாக கொண்ட பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி, கடந்த டிசம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதன் எதிரொலியாக, நேற்றைய வர்த்தகத்தின் போது, இதுவரை இல்லாத அளவுக்கு, புதிய உச்சமாக, பங்கு விலை 942.50 ரூபாயை தொட்டது. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 6 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டுள்ளது. வர்த்தக நேர முடிவில், இந்தியன் வங்கி பங்கு விலை 938.50 ரூபாயாக இருந்தது.

யூனியன் பேங்க்

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கான இ.எஸ்.ஜி.,மதிப்பீட்டை, 81.30 புள்ளிகளாக 'கேர் எட்ஜ்' நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்யளது. இதன் காரணமாக, பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, இவ்வங்கியின் பங்கு, கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்து, புதிய உச்சமாக பங்கு விலை 193.99 ரூபாயை தொட்டது. மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பு 1.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us