
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3 பிளக்ஸிகேப் பண்டுகள் அறிமுகம்
இ ந்த வாரம் ஆக்டிவ் பண்டு பிரிவில், 'ஜியோ பிளாக்ராக் பிளக்ஸிகேப் பண்டு, தி வெல்த் கம்பெனி பிளக்ஸி கேப்' மற்றும் 'பேசிவ் பண்டு' பிரிவில் 'டி.எஸ்.பி., நிப்டி 500 பிளக்ஸிகேப் குவாலிட்டி 30' இ.டி.எப்., ஆகிய மூன்று பிளக்ஸிகேப் மியூச்சுவல் பண்டுகள் சந்தைக்கு வரவுள்ளன.
ஆக்டிவ் பண்டு என்பது குறிப்பிட்ட அதிகாரி அல்லது குழுவால் நிர்வகிக்கப்படும். பேசிவ் பண்டு என்பது குறிப்பிட்ட குறியீட்டின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், முன்பே முடிவு செய்யப்பட்ட பார்முலாவில் இயங்கும்.
முதலீட்டாளர்களுக்கு எதிர்கால கணிப்பு, குழு ஆராய்ச்சி மற்றும் முடிவுகள் அடிப்படையில் செயல்படும் ஆக்டிவ் பண்டுகள், சரியான தேர்வாக இருக்கும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.