பங்குகளை தரம் பிரிக்கும் 'ஆம்பி' இடம் மாறும் 30 நிறுவனங்கள்
பங்குகளை தரம் பிரிக்கும் 'ஆம்பி' இடம் மாறும் 30 நிறுவனங்கள்
ADDED : மே 08, 2026 12:01 AM

ஒ வ்வொரு ஆண்டும், 'ஆம்பி' அமைப்பு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், பங்குகளின் கடந்த 6 மாத சராசரி சந்தை மதிப்பை வைத்து, 'லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப்' பங்குகள் என தரம் பிரிக்கும். இந்த நடவடிக்கையின்படி, இம்முறை 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இடம் மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
'நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட் ஆல்டர்நேட்டிவ் அண்டு குவாண்டிடேட்டிவ்' ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, வரவிருக்கும் மறுவகைப்படுத்தலில் 'லார்ஜ்கேப்' பிரிவிற்கான குறைந்தபட்ச சந்தை மதிப்பு கிட்டதட்ட 1.06 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 2026 ஜனவரியில் நடந்த முந்தைய 1.05 லட்சம் கோடி ரூபாயை விட சற்றே அதிகமாகும். அதேநேரத்தில், 'மிட்கேப்' பிரிவிற்கான குறைந்தபட்ச சந்தை மதிப்பு 34,800 கோடி ரூபாயில் இருந்து 32,300 கோடி ரூபாயாக குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகள், கடந்த மே 5ம் தேதியிலான சந்தை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டவை. புதிய பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
