உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 21, 2026 02:17 AM

அ நிறம் | அளவு
'ஏ .ஜி.எஸ்., ஹெல்த், பி.ஜி.பி., கிளாஸ், ஸ்ரேனி ஷேர்ஸ் மற்றும் எஸ்.ஆர்.ஐ.டி., இந்தியா' ஆகிய 4 நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வாயிலாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட செபி அனுமதி வழங்கியுள்ளது.
இதில், ஏ.ஜி.எஸ்., ஹெல்த் நிறுவனம் 4,500 கோடி ரூபாயும், பி.ஜி.பி., கிளாஸ் நிறுவனம் 4,100 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளன. அதேபோல, ஸ்ரேனி ஷேர்ஸ் நிறுவனம் 69 லட்சம் புதிய பங்குகளையும், தற்போதைய பங்குதாரர்களின் 82 லட்சம் பங்குகளை, 'ஓ.எப்.எஸ்.,' முறையிலும் விற்பனை செய்யவுள்ளது. எஸ்.ஆர்.ஐ.டி., இந்தியா நிறுவனம் 1.68 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதி, நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் கடன்களை குறைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
