5,500 புகார்களுக்கு தீர்வு: செபி துரித நடவடிக்கை
5,500 புகார்களுக்கு தீர்வு: செபி துரித நடவடிக்கை
ADDED : ஜூன் 26, 2026 11:21 PM

மு தலீட்டாளர்களின் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில் செயல்பட்டு வரும் செபியின் 'ஸ்கோர்ஸ்' ஆன்லைன் தளம் வாயிலாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 5,500க்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் இந்த தளத்திற்கு புதிதாக 4,918 புகார்கள் வந்தன. அதே நேரத்தில், முன்னரே நிலுவையில் இருந்த புகார்களையும் சேர்த்து, மொத்தம் 5,548 புகார்களுக்கு செபி வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளது. இதன் காரணமாக, மே மாத இறுதியில் நிலுவையில் உள்ள மொத்த புகார்களின் எண்ணிக்கை 5,537 ஆக குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 6,167 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறைகள் முதலீட்டாளர்கள் புகார் அளித்தவுடன் அது நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்றுவிடும்
அந்நிறுவனம் 21 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்
நிறுவனத்தின் பதிலில் முதலீட்டாளருக்குத் திருப்தி இல்லை எனில், 15 நாட்களுக்குள் முதல் கட்ட மறுஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அதிலும் திருப்தி ஏற்படாத பட்சத்தில், அடுத்த 15 நாட்களுக்குள் இரண்டாம் கட்ட மறுஆய்வுக்கு செல்லலாம்
இந்த நிலையில், செபி நேரடியாக புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
