ADDED : நவ 11, 2025 11:50 PM

நிப்டி
ந ண்பகல் 1 மணி வரை இறக்கத்தில் இருந்த நிப்டி, பின்னர் வேகமான ஏற்றத்தை சந்தித்து நாளின் இறுதியில், 120 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும், 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில் நிப்டி மிட்கேப் செலக்ட் குறியீடு அதிகபட்சமாக 1.14 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி நெக்ஸ்ட் 50 குறியீடு குறைந்தபட்சமாக 0.14 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
நிப்டி மைக்ரோ கேப் 250 குறியீடு அதிகபட்சமாக 0.26 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 துறைசார்ந்த சந்தை குறியீடுகளில் 9 ஏற்றத்துடனும், 8 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இதில், நிப்டி மீடியா குறியீடு அதிகபட்சமாக 1.20 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு குறைந்தபட்சமாக 0.34 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி பிரைவேட் பேங்க் குறியீடு அதிகபட்சமாக 0.39 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. வர்த்தகம் நடந்த 3,202 பங்குகளில் 1,559 ஏற்றத்துடனும், 1,560 இறக்கத்துடனும், 83 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.
ஓரளவுக்கு புல்லிஷாக இருப்பதை உறுதிசெய்யும் வண்ணம் நிப்டி கன்சாலிடேஷனை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும் ஏறும்போது நடக்கும் (லாபத்தை வெளியே எடுக்க நினைத்து) விற்பனை நிற்கும் சூழலில் மட்டுமே வேகமானதொரு ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
நிப்டி பேங்க்
நி ப்டியை போலவே நிப்டி பேங்க்கும் செயல்பட்டு, நாளின் இறுதியில் 200 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஒரு ஹெல்தியான கன்சாலிடேஷன் நடந்து கொண்டிருப்பது புலப்படுகிறது. குறுகியகால சப்போர்ட்களுக்கு மேலேயே இருக்கும் வரை, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பே அதிகம் எனலாம்.

