தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வர்த்தகத்தின் இடையே சிறு 'ரெக்கவரி' வந்து போகலாம்

 வர்த்தகத்தின் இடையே சிறு 'ரெக்கவரி' வந்து போகலாம்

 வர்த்தகத்தின் இடையே சிறு 'ரெக்கவரி' வந்து போகலாம்


ADDED : மார் 13, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் கணிசமாக இறங்கிய நிப்டி, பின் நீண்ட நேரத்திற்கு ஊசலாடி, 2.30 மணிக்கு மேல் ஓரளவு இறக்கத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 227 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 150' குறியீடு குறைந்தபட்சமாக 0.23 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.86 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.52 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிக பட்சமாக, 3.19 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,302 பங்குகளில், 1,237 ஏற்றத்துடனும்; 1,963 இறக்கத்துடனும்; 102 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியை பொறுத்தவரை, டெக்னிக்கலாக, 'பியரிஷ் டிரெண்ட்' தொடரவே செய்கிறது. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., இறக்கத்துக்கான சூழலையே காட்டுகின்றன என்ற போதிலும், ஆர்.எஸ்.ஐ., 'ஓவர்சோல்டு' எனும் நிலைமையை காட்டுவதால், சிறியதொரு ஏற்றம் வந்து போக வாய்ப்புள்ளது. 23,500 என்ற லெவலை சப்போர்ட்டாகவும்; 24,000 என்ற லெவலை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டு செயல்பட வாய்ப்புள்ளது. செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

எட்டர்னல் 220.90 -2.90

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 833.30 -0.65

கோல் இந்தியா 470.00 23.25

கோட்டக் மஹிந்திரா பேங்க் 375.00 -8.20

டாடா ஸ்டீல் 193.50 -1.24

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

சுஸ்லான் எனர்ஜி 42.53 0.91

எஸ் பேங்க் 19.34 -0.19

அசோக் லேலண்ட் 178.00 -6.66

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 64.86 -1.30

என்.எம்.டி.சி., 80.85 1.12

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ஐநாக்ஸ் விண்ட் 83.50 1.24

சி.இ.எஸ்.சி., 159.20 4.91

ஏஞ்சல் ஒன் 212.80 -5.73

என்.பி.சி.சி., இந்தியா 86.57 0.41

பிரமல் பார்மா 145.50 -9.92

மற்ற சில பங்குகளின் விலை விபரம்

அசோகா பில்ட்கான் 121.25 0.46

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் 267.80 12.05

கோதாவரி பவர் அண்டு இஸ்பாத் 264.00 10.25

ஷிப்பிங் கார்ப்பரேஷன் 251.00 10.95

டாடா பவர் கம்பெனி 401.95 16.20

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us