ADDED : டிச 04, 2025 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ங்குச்சந்தை முதலீட்டு நிபுணரான 'சுனில் சிங்கானியா'வின் அபாகஸ் நிறுவனம் 'மியூச்சுவல் பண்டு' துறையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
கடந்த 2018ல் தொடங்கப்பட்ட அபாகஸ் நிறுவனம், தற்போது 'போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் மற்றும் மாற்று முதலீட்டு' திட்டங்களில் 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்கிறது.
இந்நிலையில், இந்நிறுவனம், 'அபாகஸ் பிளெக்ஸி கேப்' பண்டை, டிசம்பர் 8ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. லார்ஜ், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து முதலீட்டை பெருக்குவதே இந்த பண்டின் நோக்கம் என இந்நிறுவனம் கூறியுள்ளது.

