ADDED : அக் 04, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ தானி குழுமத்துக்கு சொந்தமான ஏ.சி.சி., நிறுவனத்துக்கு, 23 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து, தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
வருமானம் தொடர்பான தவறான தகவல்களை அளித்ததாக கூறி, ஏ.சி.சி.,நிறுவனத்துக்கு, கடந்த 2015--16 மற்றும் 2018--19ம் மதிப்பீட்டு ஆண்டுகள் முறையே, 14.22 கோடி ரூபாய் மற்றும் 8.85 கோடி ரூபாய் என மொத்தம் 23.07 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2022ம் ஆண் டில் தான், அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.சி.சி.,யை, சுவிட்சர்லாந்தின் ஹோல்சிம் குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.