ADDED : பிப் 19, 2026 01:49 AM

டில்லியில் 'ஏ.ஐ., இம்பாக்ட்' மாநாடு நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, ஏ.ஐ.,தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள், கிட்டத்தட்ட 20 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன.
நெட்வெப் டெக்னாலஜிஸ்
என்விடியா நிறுவனத்தின் சி.பி.யு., மற்றும் ஜி.பி.யு.,- வாயிலாக இயங்கும் 'டைரோன் கேமரூ ஜி.பி.,200' மற்றும் 'டைரோன் கேமரூ ஸ்பார்க்' ஆகிய புதிய ஏ.ஐ., சூப்பர் கம்ப்யூட்டர்களை நெட்வெப் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக, இந்நிறுவன பங்குகள் 11 சதவீதம் உயர்ந்தன. முடிவில் 9 சதவீத உயர்வுடன் நிலைப்பெற்றன.
இ டூ இ நெட்வொர்க்ஸ்
சென்னையில் 'எல் அண்டு டி., வியோமா' தரவு மையத்தில், என்விடியாவின் அதிநவீன 'பிளாக்வெல் ஜி.பி.யு.,' கிளஸ்டரை அமைப்பதாக 'இ டூ இ நெட்வொர்க்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இந்நிறுவன பங்குகள் 20 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன. வர்த்தக நேர முடிவில் 9 சதவீத உயர்வுடன் நிலைப்பெற்றன.
ஆரியன்புரோ சொல்யூஷன்ஸ்
மும்பையில் தரவு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள 'ஆரியன்புரோ சொல்யூஷன்ஸ்' நிறுவன பங்குகள், 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன. முடிவில், 5 சதவீத உயர்வுடன் நிலைப்பெற்றது.
மற்ற சி।ல நிறுவனங்கள்
ஏ.ஐ., தொடர்புடைய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'ஓரியன்ட் டெக்னாலஜிஸ்' பங்குகள் 8 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. இது தவிர, ஏ.ஐ., தரவு மையங்களுக்கு மின் வினியோகம் செய்யும், 'கம்மின்ஸ் இந்தியா' பங்கு 3 சதவீதமும்; 'ஹிட்டாச்சி எனர்ஜி' பங்குகள் 2 சதவீதமும் உயர்வு கண்டன.
