ஏர் இந்தியா - எச்.டி.எப்.சி., ரூ.6,000 வரை தள்ளுபடி
ஏர் இந்தியா - எச்.டி.எப்.சி., ரூ.6,000 வரை தள்ளுபடி
ADDED : அக் 09, 2025 12:24 AM

ஏ ர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு எச்.டி.எப்.சி., வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, பண்டிகை காலச் சலுகையாக, வாடிக்கையாளர்கள் 6,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. அதிகபட்ச தள்ளுபடியாக சர்வதேச விமானங்களில் பிசினஸ், முதல் வகுப்பு இருக்கைகளுக்கு 6,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். உள்நாட்டு விமான டிக்கெட்களுக்கு 400 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.
இந்தச் சலுகையைப் பெற, ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது மொபைல் ஆப் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், இதற்கான எச்.டி.எப்.சி., பிளை எனும் புரோமோ கோடையும் பயன்படுத்த வேண்டியதிருக்கும். ஏர் இந்தியா தளத்தில் முழுமையான விபரங்களை அறியலாம்.