தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'ஏர்டெல் ஆக்சிஸ் கார்டு' ஏர்போர்ட் லவுஞ்ச் வசதி ரத்து

 'ஏர்டெல் ஆக்சிஸ் கார்டு' ஏர்போர்ட் லவுஞ்ச் வசதி ரத்து

 'ஏர்டெல் ஆக்சிஸ் கார்டு' ஏர்போர்ட் லவுஞ்ச் வசதி ரத்து


ADDED : மார் 12, 2026 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ச மீபகாலமாக பல வங்கிகள் தங்களின் கிரெடிட் கார்டுகளில் உள்ள 'லவுஞ்ச்' வசதியைக் குறைத்து வருகின்றன. கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், விமான நிலையங்களில் கூட்டம் கூடுவதாலும், லாபத்தை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்வதாக தெரிகிறது.

அந்த வரிசையில், குறைந்த கட்டணத்தில் அதிக பயன்களை வழங்கி வந்த, 'ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி' கிரெடிட் கார்டின் சலுகைகளை வங்கி நிர்வாகம் அதிரடியாக குறைத்துள்ளது.

முக்கிய மாற்றங்கள் 1 இதுவரை ஆண்டுக்கு 4 முறை வழங்கப்பட்டு வந்த இலவச உள்நாட்டு லவுஞ்ச் வசதி முற்றிலும் நீக்கப்படுகிறது.

2 முன்பு ஏர்டெல் பில்களுக்கு நேரடியான 'கேஷ்பேக்' கிடைத்தது; இனி, ஷாப்பிங் செய்யும் செலவு தொகையை பொறுத்தே கேஷ்பேக் வழங்கப்படும்.

3 'ஸ்விக்கி, பிக்பாஸ்கெட்' இவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத நேரடி கேஷ்பேக் வசதி முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

4 'சொமாட்டோ, பிளிங்கிட்' ஆர்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத கேஷ்பேக் பலன் தொடரும், ஆனால், அது கார்டு ஸ்டேட்மென்ட்டில் கழிக்கப்படாது. அதற்கு பதிலாக அந்தந்த செயலிகளின் வாலட்டில் வரவு வைக்கப்படும். இதற்கு குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு 499 ரூபாயாக இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us