ஆர்.பி.ஐ., நடவடிக்கைக்கு பின்னரும் அச்சம் தருகிறதா கூட்டுறவு வங்கிகள்?
ஆர்.பி.ஐ., நடவடிக்கைக்கு பின்னரும் அச்சம் தருகிறதா கூட்டுறவு வங்கிகள்?
UPDATED : அக் 26, 2025 01:10 AM
ADDED : அக் 26, 2025 12:28 AM

ரிசர்வ் வங்கி, பல்வேறு கூட்டுறவு வங்கிகளை நெறிப்படுத்துவதற்காக அண்மைக் காலத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள், வாடிக்கையாளர் களிடையே ஒருவித அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், அந்த அச்சம் தேவையானதுதானா?
பொதுவான நிலைமை:
எல்லா கூட்டுறவு வங்கிகளிலும் பிரச்னை இல்லை; பல வங்கிகள் பல ஆண்டுகளாக நிதி ஆரோக்கியத்துடன் உள்ளன. வாடிக்கையாளர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன.
ஆர்.பி.ஐ., நடவடிக்கை:
ஒருசில கூட்டுறவு வங்கிகளில் நிதி முறைகேடுகள் அல்லது நிர்வாக குளறுபடிகள் தெரிய வரும்போது, வாடிக்கையாளரின் நலன் காக்க, ஆர்.பி.ஐ., கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது.
எத்தகைய நடவடிக்கைகள்:
கூட்டுறவு வங்கியில் இருந்து எடுக்கப்படும் தொகையின் அளவை மட்டுப்படுத்துதல், நிர்வாக குழுவில் இருப்போரை மாற்றியமைத்தல்.
வாடிக்கையாளர் புரிதல்:
இத்தகைய நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை என்பதால், வாடிக்கையாளர்கள் பயப்படக் கூடாது.
வட்டி விகிதம் மற்றும் கடன்:
கூட்டுறவு வங்கிகள் பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளை விட சற்றே கூடுதலான வட்டி விகிதம் தருகின்றன, கடன்கள் விஷயத்திலும் சற்று தாராளமாக இருக்கின்றன.
காப்பீடு வசதி:
கூட்டுறவு வங்கிகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வைப்பு நிதிக் காப்பீடு உள்ளது. அதனால், மொத்த பணமும் பறிபோய்விடுமோ என்ற பயம் தேவையில்லை.
முன் எச்சரிக்கை:
முதலீட்டாளர்கள் பெரிய தொகைகளை ஒரே கூட்டுறவு வங்கியின் சேமிப்புத் திட்டங்களில் போட்டு வைப்பதை தவிர்க்கலாம்.
புத்திசாலித்தனம்:
பரவலாக பல்வேறு இடங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
கண்காணிப்பின் அவசியம்:
முதலீடு செய்துள்ள கூட்டுறவு வங்கிகளை பற்றி ஆர்.பி.ஐ., ஏதேனும் சொல்லியிருக்கிறதா, வங்கி ஏதேனும் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். நிதி நிலைமை பாதிப்புக்குள்ளாகும் என்று தோன்றினால், முதலீட்டைத் திரும்ப எடுத்துவிடலாம்.
சில அபாயங்கள்
ஒரு கூட்டுறவு வங்கியில் நிதி நெருக்கடி ஏற்பட்டால், ரிசர்வ் வங்கி அதை தடையாணையின் கீழ் கொண்டு வரலாம்
தடையாணையின் போது 5 லட்சம் ரூபாய் காப்பீடு இருந்தாலும், வைப்புத் தொகையை உடனடியாக முழுதுமாக எடுக்க முடியாது
இந்த நிலை வாடிக்கையாளர்களின் பணப் புழக்கத்தை பாதிக்கலாம்
வங்கி உரிமம் பெறாத சில கூட்டுறவு சங்கங்கள், 'வங்கி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. இங்குள்ள வைப்புத்தொகை, காப்பீட்டின் கீழ் வராது.

