தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சரிவை காணும் உலோக பங்குகள் நீண்டகால முதலீடு லாபம் தருமா?

 சரிவை காணும் உலோக பங்குகள் நீண்டகால முதலீடு லாபம் தருமா?

 சரிவை காணும் உலோக பங்குகள் நீண்டகால முதலீடு லாபம் தருமா?


UPDATED : ஜூன் 24, 2026 03:11 AM

ADDED : ஜூன் 24, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2026 03:11 AM ADDED : ஜூன் 24, 2026 02:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்தில் உலோக துறை பங்குகள் கணிசமாக சரிந்துள்ளன. 2026ல் 'நிப்டி மெட்டல்' குறியீடு 20 சதவீதம் மேல் உயர்ந்தது. ஆனால் கடந்த 30 நாட்களில் இக்குறியீடு 4.54 சதவீதம் சரிந்துள்ளது.

'ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, வேதந்தா, ஹிந்துஸ்தான் ஜிங்க், நேஷனல் அலுமினியம், ஹிண்டால்கோ, ஜிண்டால் ஸ்டீல்' போன்ற பங்குகள் 10 சதவீதத்துக்கு மேல் இறங்கியுள்ளன. இந்நிலையில் இனி வரும் நாட்களில் உலோக பங்குகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கமாடிட்டி சந்தை நிபுணர் ஷியாம் சுந்தர் நம்மிடம் தெரிவித்ததாவது:

Image 1591319


முக்கிய காரணம் அமெரிக்க டாலர் குறியீடு 101ஐ தாண்டியுள்ளது உலோக பங்குகள் சரிவுக்கு முக்கிய காரணம். அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்துள்ளதால், மீண்டும் ஒரு முறை வட்டி உயர்த்தப்படும் என்ற எதிர் பார்ப்பில் டாலர் உயருகிறது.

பொதுவாக டாலர் வலுப்பெறும்போது, கமாடிட்டி விலை குறையும். இதன் தாக்கம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் ஆகியவற்றில் தற்போது இருந்தாலும், அடிப்படை உலோகங்களான தாமிரம், அலுமினியம், ஜிங்க் ஆகியவை பெரிய விலை சரிவை காணவில்லை. காரணம், இந்த உலோகங்களுக்கான பற்றாக்குறை.

தாமிரத்துக்கு மவுசு அடுத்த 5 ஆண்டுகளில் தாமிரத்துக்கான தேவை கணிசமாக உயரும் என்று கணிப்புகள் கூறுகின்றன. ஏ.ஐ., டேட்டா சென்டர்களுக்காக தேவை மிக அதிகமாக உள்ளது. லண்டன் உலோக சந்தையில் தாமிர இருப்பு, 2025 டிசம்பரில் இருந்த அளவுக்கு குறைந்துள்ளது.

ஷாங்காய் பியூச்சர்ஸ் சந்தையிலோ 2026 மார்ச்சில் இருந்த அளவுக்கு குறைந்துள்ளது. உலகின் இரு முக்கிய உலோக சந்தைகளிலும் இருப்பு குறைந்திருப்பது என்பது, தேவை அதிகமாக உள்ளதை குறிக்கிறது .

காத்திருக்கும் சந்தை இம்மாத இறுதி யில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலோகங்கள் மீதான வரி விதிப்பு பற்றி முக்கிய அறிக்கை வெளியிட உள்ளார். வரி மேலும் உயருமா அல்லது அறிவிக்கப்பட்ட விகிதத்தில் விதிக்கப்படுமா என்பதை சந்தை கவனிக்கிறது. இம்மாத இறுதியில் தெளிவு கிடைக்கும்.



முதலீடு செய்யலாமா? இதற்கு முன் 2011ம் ஆண்டில் உலோக விலை கணிசமாக உயர்ந்தது. அத்தகைய ஒரு ஏற்றம் மீண்டும் திரும்பியுள்ளது. 2011ல் தேவை சார்ந்த ஏற்றத்தை பார்த்தோம். இப்போது பற்றாக்குறை சார்ந்த ஏற்றத்தை காண்கிறோம். 2027ம் ஆண்டுக்கு பின் உலோகங்களுக்கு தீவிர பற்றாக்குறை இருக்கும். 5 ஆண்டுகளில் உலோக விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. அவ்வப்போது வரும் செய்திகளால் விலை குறைந்தாலும் கூட, நீண்டகால முதலீடாக உலோக துறையை தேர்ந்தெடுக்கலாம்.

உலோகங்களில் முதலீடு செய்ய விரும்புவோர், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் வாயிலாக முதலீடு செய்யலாம். உலோக விலை உயரும்போது உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறுவார்கள். ஆனால், உலோகங்களை நுகரும் நிறுவனங்களின் பங்குகள் பாதிக்கப்படக்கூடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்

இவ்வாறு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us