தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டிஜிட்டல் லாக்கர் சேவை ஆக்ஸிஸ் வங்கி துவக்கம்

 டிஜிட்டல் லாக்கர் சேவை ஆக்ஸிஸ் வங்கி துவக்கம்

 டிஜிட்டல் லாக்கர் சேவை ஆக்ஸிஸ் வங்கி துவக்கம்


ADDED : மே 04, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆக்ஸிஸ்' வங்கி, தனது முதல் 'டிஜிட்டல் லாக்கர்' மையப்படுத்தப்பட்ட கிளையை மும்பையில் துவங்கியுள்ளது. தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் உயர் பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கிளை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், வரும் 2030ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 6 கோடி லாக்கர் வசதி தேவைப்படும் நிலையில், தற்போது தோராயமாக 60 லட்சம் லாக்கர்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் லாக்கர் கிளைகளை குடியிருப்பு வளாகங்களுக்கு அருகில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்


* தானியங்கி தொழில்நுட்ப முறையிலான லாக்கர் சேவை

* பல அடுக்குகள் கொண்ட கண்காணிப்பு வசதி

* சென்சார், பாஸ்வேர்டு, ஓ.டி.பி., அடிப்படையிலான பாதுகாப்பு வசதி

* ஏ.டி.எம்., மையத்தை போல 24 மணி நேரமும் லாக்கரை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us