தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மீண்டும் சுழல துவங்கும் 'பேரிங்' துறை

 மீண்டும் சுழல துவங்கும் 'பேரிங்' துறை

 மீண்டும் சுழல துவங்கும் 'பேரிங்' துறை


UPDATED : செப் 22, 2026 06:38 AM

ADDED : செப் 22, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 06:38 AM ADDED : செப் 22, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டுகளில் மந்தநிலையில் இருந்த 'பேரிங்குகள்' உற்பத்தி துறையில் தற்போது வளர்ச்சிக்கான சாதகமான சூழல் ஏற் பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக 'எஸ்.ஓ.ஐ.சி., பைனான்ஸ்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிங் தயாரிப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டுகளில் பல சவால்களை சந்தித்த நிலையில், வளர்ச்சிக்கான கா ரணங்கள் பற்றி அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏன் மந்தம்?


* இந்திய பேரிங் துறை 2024 - 2026 வரை மந்தநிலையை சந்தித்தது

* ஆட்டோமொபைல் விற்பனையில் ஏற்பட்ட தேக்கம்

* ஐரோப்பாவில் வாடிக்கையாளர்கள் இருப்பைக் குறைத்தது

* அமெரிக்காவின் வரி நடவடிக்கைகள்

* ஸ்டீல், செம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு

நிறுவனங்களில் பாதிப்பு


* ரோலக்ஸ் ரிங்க்ஸ் - வருவாய் குறைந்தது

* ஹர்ஷா இஞ்ஜினியர்ஸ் - லாபம் அதிகரிக்கவில்லை

* டிம்கென் - விற்பனை அதிகரித்தும் லாபம் குறைந்தது

மீண்டும் வளர்ச்சி


* கடந்த 2025 செப்டம்பரில் ஆட்டோமொ பைல்களுக்கு ஜி.எஸ்.டி ., குறைக்கப்பட்டது

* சிறிய கார்கள், இருசக்கர, மூன்றுசக்கர வாகனங்கள், டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்தது

* பேரிங்குகளுக்கான ஆர்டர்களும் அதிகரித்தன

* புதிய உற்பத்தி திறன்கள் அறிமுகம்

* தேவை அதிகரிப்பால், வரும் ஆண்டுகளில் லாபம் மேம்பட வாய்ப்பு

* அமெரிக்க வரி அழுத்தம் தளர்ந்துள்ள து.

புதிய வாய்ப்புகள்


ஆட்டோமொபைல் மட்டுமின்றி ரயில்வே மற்றும் காற்றாலை துறைகளும் முக்கிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

ரயில்வேக்கு 2.78 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு, புதிய வேகன்கள் வாங்கும் திட்டங்கள் மற்றும் பேரிங் தர மாற்றங்கள் போன்றவை டிம்கென் போன்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கின்றன. காற்றாலை திறன் சேர்க்கை அதிகரிப்பதால் எஸ்.கே.எப்., போன்ற நிறுவனங்களுக்கும் தேவை உயர்ந்து வருகிறது.Image 1621899

மாற்றம்


மின்சார வாகனங்களில் இன்ஜின், கியர்பாக்ஸ் போன்ற அமைப்புகள் இல்லாததால் பேரிங்குகளின் எண்ணிக்கை குறையலாம். ஆனால் மோட்டார்கள் அதிக வேகத்தில் சுழல்வதால் குறைந்த சத்தம், அதிக வேகம் மற்றும் மின்சாரத்தால் ஏற்படும் சேதத்தை தாங்கும் சிறப்பு பேரிங்குகளுக்கான தேவை அதிகரிக்கிறது. இவற்றின் விலை சாதாரண பேரிங்குகளை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம். எனவே எண்ணிக்கை குறைந்தாலும், ஒரு வாகனத்துக்கான பேரிங் மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கவனிக்க வேண்டியது


விற்பனை வளர்ச்சியுடன், லாப வரம்பு, ஆலை பயன்பாடு, மூலப்பொருள் செலவு, ஏற்றுமதி ஆர்டர்கள் மற்றும் மின்சார வாகனங்களிலிருந்து கிடைக்கும் அதிக மதிப்புள்ள பேரிங் ஆர்டர்கள் ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். ஆட்டோமொபைல் சுழற்சி மீட்புடன் ரயில்வே, காற்றாலை, தொழில்துறை மற்றும் மின்சார வாகன தேவையும் இணைந்து வருவதால், பேரிங் துறையின் வளர்ச்சி பல துறைகளை சார்ந்ததாக மாறியுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us