தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'என்.பி.எஸ்., வாத்சல்யா' திட்டத்தில் சிறார்களுக்கு கூடுதல் வசதி பி.எப்.ஆர்.டி.ஏ., அறிவிப்பு

 'என்.பி.எஸ்., வாத்சல்யா' திட்டத்தில் சிறார்களுக்கு கூடுதல் வசதி பி.எப்.ஆர்.டி.ஏ., அறிவிப்பு

 'என்.பி.எஸ்., வாத்சல்யா' திட்டத்தில் சிறார்களுக்கு கூடுதல் வசதி பி.எப்.ஆர்.டி.ஏ., அறிவிப்பு


ADDED : ஜன 15, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி றார்களுக்காக உருவாக்கப்பட்ட 'என்.பி.எஸ்., வாத்சல்யா' சேமிப்புத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், பகுதியாக அல்லது முழுதுமாக பணத்தை எடுப்பது தொடர்பான விதிகளில், முக்கிய மாற்றங்களை பி.எப்.ஆர்.டி.ஏ., எனும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ளது.

என்.பி.எஸ்., வாத்சல்யா திட்டத்தின் வாயிலாக, பெற்றோர்களும், சட்டபூர்வ பாதுகாவலர்களும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறுவயதிலிருந்தே திட்டமிட்ட சேமிப்பை உருவாக்க முடியும்.

குழந்தை 18 வயதை அடைந்ததும், இந்த கணக்கை என்.பி.எஸ்., எனும் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்த திட்டத்தில் பி.எப்.ஆர்.டி.ஏ, புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்தத் திருத்தங்கள் நீண்டகால சேமிப்பு நோக்கத்தை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி, கணக்கு தொடங்கிய 3 ஆண்டுகளுக்கு பிறகு, சேமிக்கும் பணத்திலிருந்து பகுதி பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பகுதியளவு பணம் எடுக்கும் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 18 வயதை அடையும் முன் 2 முறையும், 18 முதல் 21 வயது வரை 2 முறையும் பணத்தை எடுக்கலாம்.

இதற்கு முன் இருந்த கட்டுப்பாடுகளை ஒப்பிடுகையில், இது தளர்வாக கருதப்படுகிறது. முன்னதாக, 18 வயது வரை அதிகபட்சம் 3 முறை மட்டும் பணம் எடுக்க அனுமதி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us