sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஒரே நாளில் 96% லாபம் தந்த பாரத் கோக்கிங் கோல் பங்குகள்

/

 ஒரே நாளில் 96% லாபம் தந்த பாரத் கோக்கிங் கோல் பங்குகள்

 ஒரே நாளில் 96% லாபம் தந்த பாரத் கோக்கிங் கோல் பங்குகள்

 ஒரே நாளில் 96% லாபம் தந்த பாரத் கோக்கிங் கோல் பங்குகள்


ADDED : ஜன 20, 2026 01:56 AM

Google News

ADDED : ஜன 20, 2026 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பாரத் கோக்கிங் கோல்' நிறுவன பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் வலுவான பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டன.

ஐ.பி.ஓ., வெளியீட்டு விலையை விட 96 சதவீதம் கூடுதல் விலையில் பட்டியலிடப்பட்டதால், ஒதுக்கீடு பெற்ற முதலீட்டாளர்களின் பணம் இரு மடங்காக உயர்ந்தது. இந்த ஆண்டின் முதல் ஐ.பி.ஓ., முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் ஈட்டித் தந்து உள்ளது.

இந்நிறுவன பங்குகள் பி.எஸ்.இ.,-யில் ரூ.45.21 மற்றும் என்.எஸ்.இ.,-யில் ரூ.45 என வர்த்தகத்தை துவங்கிய நிலையில், மதிய நேர வர்த்தகத்துக்கு பிறகு, பங்கு விலை சரிய ஆரம்பித்து, என்.எஸ்.இ.,-யில் ரூ.40.58-க்கும், பி.எஸ்.இ.,-யில் ரூ.40.66-க்கும் வர்த்தகத்தை முடித்தது.

ஸ்டீல் துறையில் அதிகரித்து வரும் தேவை, உள்நாட்டில் கோக்கிங் கோல் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த பங்குக்கு முதலீட்டாளர்களிடம் மவுசு அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

முதலீட்டாளர்களின் பெரும் பங்கேற்பால் பாரத் கோக்கிங் கோல் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீடு 146.81 மடங்கு அதிகமாக சந்தா பெற்றது. 1,071 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த புதிய பங்கு வெளியீட்டில், விலை வரம்பு பங்கு ஒன்றுக்கு ரூ.21-.23 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us