பி.என்.பி., கிரெடிட் கார்டு ரூ.25,000 வரை சேமிக்கலாம்
பி.என்.பி., கிரெடிட் கார்டு ரூ.25,000 வரை சேமிக்கலாம்
UPDATED : அக் 12, 2025 04:13 AM
ADDED : அக் 12, 2025 03:43 AM

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க், பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கிரெடிட் கார்டு செலவழிப்புக்கு சலுகைகளை வழங்குகிறது.
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், விமான பயணம், ஹோட்டல், உணவு டெலிவரி ஆகியவற்றுக்கு கிரெடிட் கார்டில் பணம் செலுத்தும்போது, அதிகபட்சம் 27.50 சதவீதம் வரை சலுகைகளைப் பெறலாம்.
டெல், சாம்சங், சோனி, ரியல்மீ, குரோமா நிறுவன பொருட்களுக்கு 10 முதல் 27.50 சதவீதம் வரை, அதிகபட்சம் 25,000 வரை தள்ளுபடி.
உள்நாட்டு விமான பயணம்
12% - 15% வரை உடனடி தள்ளுபடி, அதிகபட்ச தொகை 1,800 ரூபாய் .
சர்வதேச விமான பயணம்
10% தள்ளுபடி, அதிகபட்சம் ரூ.7,500
ஹோட்டல்கள்
உள்நாட்டு ஹோட்டல் முன்பதிவுக்கு 15 -20% தள்ளுபடி, அதிகபட்சம் ரூ.5,000. வெளிநாடுகளில் 15%, அதிகபட்சம் ரூ.20,000
இ-காமர்ஸ் ஷாப்பிங்
பிளிப்கார்ட், மைந்த்ரா, பர்ஸ்ட்கிரை-யில் 10% தள்ளுபடி, கூடுதல் போனஸ் ரூ.1,250
உணவு டெலிவரி, அத்தியாவசிய பொருட்கள்
சொமாட்டோ 10%, அதிகபட்சம் ரூ.100. மளிகை 7% அதிகபட்சம் ரூ.200.
பேடிஎம் வழியாக பில் செலுத்தினால் 10%, அதிகபட்சம் ரூ.150 தள்ளுபடி