'கோல்கேட்' பங்குகள் சரிவு பரிந்துரைக்கும் தரகு நிறுவனங்கள்
'கோல்கேட்' பங்குகள் சரிவு பரிந்துரைக்கும் தரகு நிறுவனங்கள்
ADDED : மே 26, 2026 01:00 AM

'கோ ல்கேட் பாமோலிவ் இந்தியா' நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்ட வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்நிறுவன பங்குகளை வாங்கலாம் என்றும் சர்வதேச தரகு நிறுவனமான நோமுரா பரிந்துரைத்து உள்ளது.
நகர்ப்புற சந்தை வளர்ச்சி மற்றும் பிரீமியம் தயாரிப்புகளின் விற்பனை உயர்வால் 2026--27ம் நிதியாண்டில் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் உள்ள இந்நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் எனவும் கணித்துள்ளது. எனவே, இந்நிறுவன பங்கு ஒன்றின் இலக்கு விலை 2,050 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி பரிந்துரைத்துள்ளது
அதேபோல, இந்நிறுவன பங்கு ஒன்றின் விலை 2,600 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என மற்றொரு தரகு நிறுவனமான 'ஜெப்ரீஸ்' கணித்துள்ளது.
இருப்பினும், தற்போது மிக அதிக மதிப்பீட்டுடன் இருப்பதாகக்கூறி பெரும்பாலான சந்தை ஆய்வாளர்கள் இப்பங்கிற்கு 'விற்கலாம்' அல்லது 'ஹோல்டு' பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர்.
இந்த சூழலில், கோல்கேட் நிறுவனத்தின் நிகர லாப தேக்கம் மற்றும் செயல்பாட்டு மார்ஜின் குறைவு காரணமாக அதன் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தில் 2.68 சதவீதம் சரிந்து 2,097 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது.
