உள்ளடக்கத்திற்கு செல்ல

பி.எஸ்.இ., பங்குகள் உயரக்கூடும் ஆய்வு நிறுவனங்கள் கணிப்பு
பி.எஸ்.இ., பங்குகள் உயரக்கூடும் ஆய்வு நிறுவனங்கள் கணிப்பு
ADDED : மே 10, 2026 01:00 AM

அ நிறம் | அளவு
'பி .எஸ்.இ., நிறுவனத்தின்' பங்குகள் உயர வாய்ப்புள்ளதாக ஆய்வு நிறுவனங்களான 'நுவாமா, மோதிலால் ஓஸ்வால் 'ஆகியவை கணித்துள்ளன.
'பி.எஸ்.இ.,யின் நான்காவது காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளது. நான்காவது காலாண்டில், நிகர லாபம் 61 சதவீதம் உயர்ந்து 797 கோடி ரூபாயாகவும், வருவாய் 85 சதவீதம் அதிகரித்து 1,564 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு நிதி முடிவுகள் வலுவாக இருந்தபோதிலும், தேசிய பங்கு சந்தையில் வர்த்தகமாகும் பி.எஸ்.இ.,யின் பங்கு விலை 1.42 சதவீதம் சரிந்து 3,907.40 ரூபாயாக உள்ளது
