உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 13, 2026 01:02 AM

அ நிறம் | அளவு
க னரா வங்கி 'எம்.சி.எல்.ஆர்.,' எனும் அடிப்படை வட்டி விகிதத்தை அனைத்து கடன் கால வரம்புகளுக்கும் 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால், கடன் வாங்கியவர்களுக்கு எம்.சி.எல்.ஆர்., விகிதத்துடன் இணைக்கப்பட்ட 'ப்ளோட்டிங் ரேட்' கடன்கள் இருந்தால், வட்டி விகிதம் உயரும்.
நேற்று முதல் வழங்கப்பட்ட கடன்கள், ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன்களுக்கு புதிய வட்டி விகிதம் பொருந்தும். அதேபோல புதுப்பிக்கப்பட்ட கடன்கள், மறுபரிசீலனை செய்யப்பட்ட கடன்கள், வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்ட கடன்களுக்கும் இது பொருந்தும்.
கடன் வாங்கியவரின் விருப்பத்தின் பேரில் எம்.சி.எல்.ஆர்., வட்டி விகித முறைக்கு மாற அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் இது பொருந்தும்.
