UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 10:25 PM
2.11.26 ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 23,222.30 23,440.80 23,207.05 23,440.80
நிப்டி 169 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து உயர்ந்து இறுதியில் 387 புள்ளிகள் ஏற்றத்துடன் நாளின் உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி ஸ்மால்கேப்50’ குறியீடு குறைந்தபட்சமாக 0.43 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி100’ குறியீடு அதிகபட்சமாக 1.71 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும், 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி ஆயில் & கேஸ்’ குறியீடு அதிகபட்சமாக 5.95 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி மீடியா’ குறியீடு அதிகபட்சமாக 0.76 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,713 நிறுவனங்களின் பங்குகளில் 2,445 ஏற்றத்துடனும், 1,164 இறக்கத்துடனும், 104 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் டெக்னிக்கல் நிலைமை குறுகிய கால அளவீட்டில் பாசிட்டிவ்வாக மாறியுள்ளது. எம்.ஏ.சி.டி., இன்னும் நெகட்டிவாகவே இருந்தாலும் சிக்னல் லைனாகிய –123.46க்கு மேலே –27.88ல் சிக்னல் லைனைவிட 95.58 புள்ளிகள் அதிகமாக இருப்பது ஏற்றத்திற்கான மொமென்டம் ஓரளவு அதிகரித்திருப்பதை குறிக்கிறது. ஆர்.ஓ.சி., 3.62 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ., 61.03 என்ற அளவிலும் இருப்பதும் பாசிட்டிவ் மொமென்டம் இருப்பதையே அடையாளம் காட்டுகிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் %டி(3,5) 95.61 என்ற அளவிலும் %கே(5) 100 என்ற அளவிலும் இருப்பது சந்தையின் ‘ஓவர்பாட்’ நிலைமையை காட்டுகிறது.
இது எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்பதை உணர்த்துகின்றது. +டி.ஐ., 25.21 என்ற அளவிலும், –டி.ஐ., 20.92 என்ற அளவிலும் ஏ.டி.எக்ஸ்., 31.13 என்ற அளவிலும் இருப்பது ஏற்றத்திற்கான சூழல் ஓரளவு வலுவாக இருப்பதை காட்டுகிறது. நிப்டி முக்கிய சராசரிகளுக்கு மேலே நிறைவடைந்திருப்பதால் குறுகிய கால சூழல் ஓரளவு ஏற்றத்துக்கு சாதகமாகவே இருக்கிறது. 23,440க்கு மேலே சென்று நிலைத்து, பின்னர் 23,500–23,600 என்ற நிலைகளையும் தாண்டினால் மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனலாம்.
23,285 23129 23,040
23,519 23,597 23,686
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 2.11.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
அசோக் லேலண்டு (எம்.ஏ.சி.டி.,(12,26) :–3.09 ஆர்.ஓ.சி., :2.90 ஆர்.எஸ்.ஐ., :49.05) 149.20 146 143 154 2, 5, 6
பாரத் எலக்ட்ரானிக்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :2.82 ஆர்.ஓ.சி., :1.94 ஆர்.எஸ்.ஐ., :60.60) 376.50 371 366 381 2, 4, 5
கேஸ்ட்ரால் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26) :0.78 ஆர்.ஓ.சி., :–0.24 ஆர்.எஸ்.ஐ., :55.93) 196.50 190 183 200 2, 5
ஜோதி லேப்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :–4.12 ஆர்.ஓ.சி., :–2.65 ஆர்.எஸ்.ஐ., :50.91) 185.75 180 175 188 1, 3, 4
டாடா ஸ்டீல் (எம்.ஏ.சி.டி.,(12,26) :–2.79 ஆர்.ஓ.சி., :1.65 ஆர்.எஸ்.ஐ., :53.03) 177.37 172 168 182 1, 3, 4
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
