உள்ளடக்கத்திற்கு செல்ல

மெகா ஐ.பி.ஓ., விதிகள் தளர்வு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
மெகா ஐ.பி.ஓ., விதிகள் தளர்வு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
UPDATED : மார் 16, 2026 01:38 AM
ADDED : மார் 16, 2026 01:18 AM

அ நிறம் | அளவு
மி கப்பெரிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை எளிதாக்கும் வகையில், 'குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர்' விதிகளில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனம் பட்டியலிடப்படும் போது 25 சதவீதம் பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ அல்லது என்.எஸ்.இ., போன்ற மெகா நிறுவனங்கள் 25 சதவீதம் பங்குகளை ஒரே நேரத்தில் வெளியிட்டால், சந்தையில் உள்ள மொத்த பணத்தையும் அது உறிஞ்சிவிடக்கூடும்.
இது மற்ற பங்குகளை பாதிக்கும். இப்படி நடக்காமல் இருக்கவே இந்த அதிரடி மாற்றங்களை அரசு கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது.

