தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., விதிகளில் மாற்றம்

 அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., விதிகளில் மாற்றம்

 அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., விதிகளில் மாற்றம்


ADDED : டிச 18, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 01:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான பி.எப்.ஆர்.டி.ஏ., அரசு பணியில் இல்லாதவர்களுக்கான என்.பி.எஸ்., விதிகளில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. இதன் வாயிலாக, பணம் எடுப்பதிலும், வெளியேறுவதிலும் கூடுதல் வசதிகள் கிடைக்க உள்ளன.

அதன் முக்கிய அம்சங்கள்

* அரசு பணியில் இல்லாதவர்களுக்கு என்.பி.எஸ்., திட்டத்தில் இணைந்த பிறகு, வெளியேறுவதற்கு இருந்த 5 ஆண்டு கட்டாய காத்திருப்பு காலம் நீக்கப்பட்டுள்ளது

* மொத்த சேமிப்பு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், முழு தொகையையும் ஒரே தவணையாக எடுத்து கொள்ள அனுமதி

* மொத்த சேமிப்பு 8 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால், 6 லட்சம் ரூபாயை மொத்தமாக எடுக்கலாம்; மீதமுள்ள தொகைக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

* மொத்த சேமிப்பு 12 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், 80 சதவீத தொகையை எடுத்து கொள்ளலாம்; மீதமுள்ள 20 சதவீத தொகை மட்டுமே ஓய்வூதிய தொகுப்பு நிதியாக மாற்றப்படும்

* சந்தாதாரர்கள் தற்போது 85 வயது வரை முதலீட்டை தொடரலாம். ஒருவர் 60 வயதானாலும் புதிதாக என்.பி.எஸ்., கணக்கை துவங்கலாம்.

* சந்தாதாரர், 60 வயது பூர்த்தியடைந்தாலோ அல்லது 15 ஆண்டுகள் திட்டத்தில் நீடித்தாலோ வெளியேற அனுமதி உண்டு

* இந்திய குடியுரிமையை துறப்பவர்கள், கணக்கை முடித்துவிட்டு மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்

* சந்தாதாரர் காணாமல் போனால், வாரிசுகளுக்கு இடைக்கால நிவாரணமாக, மொத்த முதலீட்டில் 20 சதவீத தொகை வழங்கப்படும்

* பகுதியளவு திரும்ப பெறாத, ஓய்வூதிய தொகுப்பு நிதியை தேர்வு செய்யாத சந்தாதாரர் உயிரிழந்தால், முழு தொகை யும் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்படும்

* அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டு லாக்-இன் காலம் தொடரும்; அவர்கள் முழு தொகையையும் திரும்ப பெறுவதற்கான வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us