தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வர்த்தக நேரத்தில் மாற்றம்: செபி ஆலோசனை இனி இழப்புகள் தடுக்கப்படுமா?

 வர்த்தக நேரத்தில் மாற்றம்: செபி ஆலோசனை இனி இழப்புகள் தடுக்கப்படுமா?

 வர்த்தக நேரத்தில் மாற்றம்: செபி ஆலோசனை இனி இழப்புகள் தடுக்கப்படுமா?


ADDED : செப் 14, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 02:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு சந்தையின் எக்ஸ்பைரி நாட்களில் ஏற்படும் செயற்கையான விலை மாற்றங்கள் மற்றும் ஆப்ஷன் பிரீமியம் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த, செபி முக்கிய புதிய சீர்திருத்த ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சி.ஏ.எஸ்., என்கிற 'குளோசிங் ஆக்சன் செஷன்' ஏல முறைக்கு பிறகு கடைசி நேர ஆர்டர் ரத்துகளால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சந்தை பங்கேற்பாளர்களின் கருத்துகளை பெற்று செபி உடனடியாக இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இப்புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பைரி நாட்களில் ஆப்ஷன் பிரீமியங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களும், செயற்கை சந்தை கையாளுதல்களும் பெருமளவில் கட்டுப்பட்டு, சிறு வர்த்தகர்களின் தேவையற்ற இழப்புகள் தவிர்க்கப்படும்.

முக்கிய பரிந்துரைகள்

1 ரொக்க சந்தையின் முடிவு விலைக்கும், டெரிவேட்டிவ்ஸ் ஒப்பந்தங்களின் இறுதி செட்டில்மென்ட் விலைக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பை நீக்குதல்.

2 ஏல நேரத்தின் போது நேரலையாக வெளியிடப்படும் உத்தேச குறியீட்டு மதிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது.

3 ஒரு சதவீத வரம்பிற்கு வெளியே இடப்படும் ஆர்டர்களை எளிதில் ரத்து செய்ய முடியாதபடி விதிகளை கடுமையாக்குவது.

4 சி.ஏ.எஸ்., ஏலத்தின் போது பெரிய அளவிலான பங்குகளை வாங்குவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு அனுமதி அளிப்பதுடன், ஏலத்திற்கு பிந்தைய வர்த்தக நேரத்தை 5 நிமிடங்களாக குறைப்பது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us