sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தடைகளை தாண்ட திட்டமிடும் 'சிப்லா'

 தடைகளை தாண்ட திட்டமிடும் 'சிப்லா'

 தடைகளை தாண்ட திட்டமிடும் 'சிப்லா'


UPDATED : பிப் 15, 2026 01:49 AM

ADDED : பிப் 15, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2026 01:49 AM ADDED : பிப் 15, 2026 01:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று 'சிப்லா'. இந்தியாவில் பிராண்டட் பார்முலேஷன்ஸ், அமெரிக்காவில் ஜெனரிக்ஸ் பிரிவிலும், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில், 45 சதவீத வருவாய் இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. சுவாச மண்டலம் சார்ந்த மருந்து தயாரிப்பில் சிப்லா சர்வதேச அளவில் வலுவான இடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்நிறுவனம் 9,100 கோடி ரூபாய் ரொக்க இருப்புடன் மிக வலுவான நிதி நிலைமையை கொண்டுள்ளது.

அமைப்பு ரீதியாக வலுவாக இருந்தபோதிலும், சிப்லா தற்போது தனது அமெரிக்க சந்தையில் சில தற்காலிக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த ஏற்ற இறக்கங்களே, நிறுவனத்தின் வருவாய் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

நடப்பு நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனையில், அமெரிக்காவிலிருந்து 21 சதவீதமும்; ஆப்ரிக்காவிலிருந்து 14 சதவீதமும்; வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 13 சதவீத வருவாயும் வருகிறது.

அமெரிக்க வணிகம் ரெவ்லிமிட்: அமெரிக்க சந்தையில் இதுவரை சி ப்லாவிற்கு அதிக லாபத்தையும் வருவாயையும் தந்துவந்த இந்த மருந்தின் பிரத்யேக ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருகின்றன.

இதனால் சந்தையில் போட்டி அதிகரித்து, விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, 2026 - 27 நிதியாண்டில், அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் வருவாய் குறையக்கூடும்.

லான்ரியோடைடு: அமெரிக்க சந்தையில் சிப்லாவின் மற்றொரு முக்கிய மருந்து இது. இதை தயாரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தில் (பார்மத்தேன்), அமெரி க்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன .

இதனால், 2025 முதல் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 2027ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு முதல் இதன் விற்பனை துவங்கும் எ ன எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, ரெவ்லிமிட் மற்றும் லான்ரியோடைடு ஆகிய இரண்டு மருந்துகளும் நிறுவனத்தின் மொத்த வருவாய் மற்றும் லாப வரம்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்க மீட்சி


நடப்பு நிதியாண்டில் 8 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 4 சுவாச மண்டலம் சார்ந்த மருந்துகளையும்; 4 பெப்டைகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Image 1536085

குறுகிய கால திட்டங்கள்: இரண்டு முக்கிய சுவாச மண்டல மருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒன்று லான்ரியோடைடு அளவிற்கு பெரிய சந்தை வாய்ப்பை கொண்டது. இரண்டாவதாக, ஒரு சிறிய பெப்டைடு மருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Image 1536086

சிம்பிகார்ட்: இது 22,750 கோடி ரூபாய் முதல் 26,390 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை வாய்ப்பாகும். அத்துடன் ஒரு பெரிய பெப்டைடு மருந்தும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அட்வைர்: லேன்னட்/அரவிந்தோ ஆகிய நிறுவனங்களுக்கு சமீபத்தில் கிடைத்துள்ள ஒப்புதலால், இந்த மருந்துக்கான சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது.

க்யூவார் ரெடிஹேலர்: இது 2,994 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையாகும். இதில் போட்டி மிகவும் குறைவு. ஏனெனில், இதில் பயன்படுத்தும் நுட்பமானது, மற்றவர்கள் எளிதில் நகலெடுக்க முடியாத ஒரு தடையாக உள்ளது.

கேடெக்ஸ்: இது 6,370 முதல் 7,280 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையாகும். இதில் 2 முதல் 3 நிறுவனங்கள் மட்டுமே போட்டியாளர்களாக இருக்க வாய்ப்புள்ளதால், விலை சரிவு மிதமாகவும் லாப வரம்பு அதிகமாகவும் இருக்கும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட்டு, 2027ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் லான்ரியோடைடு உற்பத்தி மீண்டும் துவங்கினால், அமெரிக்க வருவாய் 2028 நிதியாண்டில் நிலைபெற்று மீண்டும் வளர்ச்சியை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது.

இந்தியாவில் - வளர்ச்சி


சிப்லா நிறுவனத்தின் மொத்த லாபத்தில் கிட்டத்தட்ட 45 சதவீத லாபம் இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. சுவாச மண்டல மருத்துவத்தில் முன்னணி இடத்தை தக்கவைத்தல், தீராத நோய்களுக்கான சிகிச்சைகளில் (சர்க்கரை நோய், இதய நோய்கள்), கவனம் செலுத்துதல், மருந்து வினியோக கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த சிப்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டர்செபடைடு: டர்செபடைடு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக இலி - லில்லி நிறுவனத்திடமிருந்து உரிமத்தை பெற்றுள்ளது. மார்ச் 2026ம் ஆண்டோடு செமாக்ளுடைடு மருந்துக்கான காப்புரிமை முடிந்து அது ஜெனரிக் மருந்தாக மாறுவதால், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், உயர்தர ஜி.எல்.பி.,-1 சிகிச்சைக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், அதன் வளர்ச்சி தொடரும் என்றும் சிப்லா நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்தியா நிலையான வளர்ச்சியை வழங்குவதோடு, டர்செபடைடு அறிமுகத்தால் அந்த வளர்ச்சி மேலும் வேகமெடுக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்க சந்தையின் குறுகிய கால வருவாய் குறித்த தெளிவற்ற நிலையால், பங்கின் விலை சரிவையும் மதிப்பு வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது. இருப்பினும், வலுவான இந்திய வணிகக் கட்டமைப்பு, கடனில்லா நிதிநிலை மற்றும் 2027ம் நிதியாண்டிற்கான புதிய தயாரிப்பு அறிமுகங்கள் ஆகியவற்றால், 2028ம் நிதியாண்டிலிருந்து வருவாய் மீண்டும் உயர்வதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

பொறுப்பு துறப்பு


இந்த கட்டுரை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us