சிட்டி யூனியன் வங்கி பங்கு 10 மாதங்களில் 101% உயர்வு
சிட்டி யூனியன் வங்கி பங்கு 10 மாதங்களில் 101% உயர்வு
ADDED : டிச 25, 2025 02:05 AM

தனியார் துறையைச் சேர்ந்த, 'சிட்டி யூனியன் வங்கி' பங்குகள், கடந்த 10 மாதங்களில் 101 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இவ்வங்கியின் பங்கு ஒன்றின் விலை 147 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று புதிய உச்சமாக 297 ரூபாயை தொட்டு, வர்த்தகத்தின் இறுதியில் 296 ரூபாயாக நிறைவுபெற்றது.
கடந்த 3 மாதங்களில் மட்டும், இவ்வங்கி பங்குகளின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
வங்கியின் லாபம் மற்றும் சொத்து மதிப்பு சீராக வளர்ந்து வருவதும், மூலதன கையிருப்பு 20.71 சதவீதம் என்ற வலுவான நிலையில் இருப்பதும், பங்குகள் ஏற்றத்துக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்; புதிதாக துவங்கப்பட்ட ரீடெய்ல் வர்த்தகம், வங்கியின் வருவாயை அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
இவ்வங்கி பங்குகள் ஏற்கனவே உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வரும் நாட்களிலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, பங்கு தரகு நிறுவனமான 'நிர்மல் பாங்' தெரிவித்துள்ளது.

