கர்நாடக முதல்வர் மாற்றத்தால் 'காபி டே' பங்குகள் உயர்வு
கர்நாடக முதல்வர் மாற்றத்தால் 'காபி டே' பங்குகள் உயர்வு
ADDED : மே 30, 2026 12:20 AM

க ர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தற்போது துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார் அடுத்த முதல்வராக பொறுப்பேற்பார் என்ற தகவலால் 'காபி டே' நிறுவன பங்குகள் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் உயர்ந்து 'அப்பர் சர்க்யூட்' நிலையை எட்டின. வர்த்தக முடிவில் இதன் பங்கு விலை 34.78 ரூபாயாக நிறைவடைந்தது.
டி.கே.சிவகுமாரின் மூத்த மகள், காபி டே நிறுவனர் மறைந்த வி.ஜி.சித்தார்த்தாவின் மகனை திருமணம் செய்துள்ளதால், இந்த அரசியல் மாற்றம் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுமட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் 114.16 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த இந்நிறுவனம், நடப்பு காலாண்டில் 132.07 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி வலுவாக மீண்டெழுந்திருப்பதும் இந்த விலையேற்றத்திற்கு மிக முக்கிய காரண மாகும்.
