ADDED : அக் 31, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ மெரிக்க ஐ.டி., நிறுவனமான காக்னிசன்ட், நம் நாட்டில் ஐ.பி.ஓ., வர திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனத்தின்  தலைமை நிதி அதிகாரி ஜதின் தலால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் வர்த்தகமாகி வரும்  இந்நிறுவனம், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதன் வாயிலாக, நம் உள்நாட்டு முதலீட்டாளர்களும் காக்னிசன்ட் நிறுவன பங்குகளை வாங்க முடியும். அமெரிக்காவில் இந்நிறுவன சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 3.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

