ADDED : அக் 06, 2025 10:47 PM

தங்கம், வெள்ளி
க டந்த 2023ம் ஆண்டு முதலே உயரத் துவங்கிய தங்கம், வெள்ளி விலை, கடந்த செப்டம்பர் மாதத்தில் பலமுறை வரலாற்று உச்சத்தை எட்டியது.
நேற்று ஒரு அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) 3,950 அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது, தற்போது ஒரு அவுன்ஸ் 3,930 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி ஒரு அவுன்ஸ் 48.75 டாலராக உச்சம் தொட்டு, தற்போது 48.207 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் விலை உயர்வுடன் ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
சீனாவின் மத்திய வங்கி, ஆகஸ்ட் மாதத்தில் தன் தங்கக் கையிருப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து 10வது மாதமாக தங்கம் வாங்கும் நடவடிக்கை நீடித்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் சீனாவின் தங்கக் கையிருப்பு 74.02 மில்லியன் அவுன்ஸ் ஆக இருந்தது. இது, ஜூலை மாத இறுதியில் இருந்த 73.96 மில்லியன் அவுன்சிலிருந்து உயர்வாகும்.
தங்கம் பொதுவாகவே ஆபரண தேவையை காட்டிலும் முதலீட்டு பொருளாகவே கருதப்படுகிறது. எனவே, வட்டி விகிதங்கள் குறையும்போது முதலீட்டாளர்கள் தங்களுடைய அரசு பத்திரங்கள் மீதான முதலீடுகளை திரும்பப் பெற்று, தங்கம் மீது முதலீட்டை அதிகப்படுத்துகின்றனர்.
கே. முகேஷ்குமார்துணை தலைவர்.சாய்ஸ் புரோக்கிங் பபிரைவேட் லிமிடெட்..