
தங்கம்
@@
பண்டிகையால் தேவை அதிகரிக்கும்
இ ந்தியாவின் தங்க இறக்குமதி, ஜூலை மாதத்தில் அதிகரித்தது. செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை, இந்தியாவில் பரவலாக பண்டிகை காலமாகும், இதனால் தங்கத்தின் கையிருப்புகளை வியாபாரிகள் அதிகப்படுத்தியதால், இறக்குமதி அதிகரித்தது.
மூன்று மாதங்களாக குறைந்திருந்த தங்க இறக்குமதி, ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 400 கோடி டாலராக உயர்ந்தது. இது, 42 முதல் 48 டன் தங்கம் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகமாகியுள்ளது. தற்பொழுது இ.டி.எப்., முதலீட்டு முறை மக்களிடையே வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது. உலக தங்க கவுன்சில் தகவல் படி, ஜூலை மாத இறுதிவரையில், இந்திய தங்க இ.டி.எப்.,களின் சொத்தை நிர்வகிக்கும் மதிப்பு, 700.85 கோடி டாலர் ஆக இருந்தது.
இது கடந்த ஆண்டைவிட 96 சதவீதம் அதிகம். ஜூலை மாதத்தில் மட்டும் 2.15 லட்சம் புதிய இ.டி.எப்., கணக்குகள் துவக்கப்பட்டன. நடப்பு ஆண்டில், இதுவரை இந்த கணக்குகள் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்தியாவில் தற்போது பட்டியலிடப்பட்ட தங்க இ.டி.எப்.,-களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உள்ளது.
இயற்கை எரிவாயு
விலை உயர வாய்ப்பு குறைவு
அ மெரிக்காவில் கையிருப்பு அதிகரித்ததும், எல்.என்.ஜி., ஏற்றுமதி தேவை குறைந்ததும், விலை மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கையிருப்பில் சேர்க்கப்படும் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இது வினியோகம் அதிகமாக இருப்பதை காட்டுகிறது. உற்பத்தியும் சாதனை அளவில் தொடர்கிறது. 2025-ல் உள்நாட்டு தேவை மற்றும் மொத்த உற்பத்தி உயரும் என்று கணிக்கப்பட்டாலும், அதிக வழங்கல் வினியோகமாக சந்தையில் போதுமான அளவு எரிவாயு இருக்கும். இதனால் விலை உயர்வுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.

