
தங்கம், வெள்ளி
க டந்த சில மாதங்களாகவே இந்த உலோகங்களின் விலை அதிகரித்து, வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக தங்கம் விலை, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு அவுன்ஸ் 1,614 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் 135 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 3,791 அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை எட்டியது.
வெள்ளி விலையும் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு அவுன்ஸ் சுமார் 18.75 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 137 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 44.50 டாலர் எனும் உச்சத்தை எட்டியது.
முதலீட்டாளர்கள் மற்றும் பல நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தின் மீதான முதலீட்டினை அதிகப்படுத்தியதும், வளர்ச்சி குறைவு மற்றும் பணவீக்க விகிதம் அதிகரிப்பு, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு போன்றவையும் தங்கம் விலைக்கு சாதகமான போக்கினை வலியுறுத்தி வருகிறது.
கச்சா எண்ணெய்
செ ப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 6,1-66 அமெரிக்க டாலர் என்ற நிலையில் சீராக வர்த்தகமாகி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் எட்டு சதவீத சரிவிலிருந்து பகுதியளவில் மீண்டிருந்தாலும், ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 11 சதவீதம் குறைவாகவே உள்ளது.
உலகளாவிய தேவை உயர்வில் 60 சதவீத பங்கை, இந்தியா மற்றும் சீனா இணைந்து வகித்தன. இதனால் ஆசியாவின் ஆகஸ்ட் மாத இறக்குமதி ஒரு நாளுக்கு 270.2 லட்சம் பீப்பாய் ஆக உயர்ந்தது. இது, ஆண்டு அடிப்படையில் 1.90 சதவீதம் அதிகரிப்பு. எனினும், மொத்த தேவை நிலவரம், எச்சரிக்கையான நிலையில் தொடர்கிறது.
கே.முருகேஷ் குமார்
துணைத்தலைவர்,
சாய்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட்