UPDATED : செப் 23, 2025 01:10 AM
ADDED : செப் 23, 2025 12:31 AM

தங்கம், வெள்ளி
த ங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தங்கத்தின் விலை, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1 அவுன்ஸ் 1,614 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்து, 1 அவுன்ஸ் 3,728 டாலராக, வரலாற்று உச்சத்தை இந்த மாதத்தில் எட்டியது.
வெள்ளி விலை கடந்த 2022ல் செப்டம்பர் மாதத்தில் 1 அவுன்ஸ் 18.75 டாலர் என்ற நிலையில் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்து, 1 அவுன்ஸ் 43.80 டாலரை இம்மாதத்தில் எட்டியது.
முதலீட்டாளர்களும், பல நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகப்படுத்தியது; அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு ஆகியவை, தங்கத்தின் விலைக்கு சாதகமான போக்கை ஆதரிக்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, உள்நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு, மேலும் ஒரு காரணமாக அமைந்தது.
கச்சா எண்ணெய்
க டந்த வாரம் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்ற போதிலும்; வார இறுதி நாட்களில், சரிவில் வர்த்தகமாகி, 1 பேரல் 62.40 டாலர் என்ற நிலையில் முடிவுற்றது.
அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்புக்கு பின், தொடர்ச்சியாக விலை சரிவு ஆரம்பித்தது.
பணவீக்க விகிதம் அதிகரிப்பு, வேலையில்லாதோர் எண்ணிக்கை விகிதம் உயர்வு போன்றவற்றால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், பெடரல் வங்கி வட்டியை குறைத்தது.
இது, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையை மிகவும் பாதித்தது. இதன் காரணமாக விலையில் சரிவு ஏற்பட்டது.