தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி


ADDED : அக் 01, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2025 01:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செம்பு

ல ண்டன் பொருள் வாணிப சந்தையில், செம்பு விலை கடந்த வாரம் இந்த ஆண்டின் உச்சபட்ச விலையான 10,500 அமெரிக்க டாலர்களை எட்டியது. தற்போது, ஒரு டன் 10,345 அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

உலகின் இரண்டாம் மிகப்பெரிய செம்பு உற்பத்தி சுரங்கமான கிராஸ்பெர்க் இந்தோனேஷியாவில் அமைந்துள்ளது. கடந்த மாதத்தில் ஏற்பட்ட விபத்தால், சுரங்கத்தின் செயல்பாடுகள் தடைப்பட்டு, உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில், விலை அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த சுரங்கமானது, கடந்த ஆண்டில் 8.15 லட்சம் மெட்ரிக் டன் செம்பை உற்பத்தி செய்தது. இது உலகளாவிய மொத்த உற்பத்தியில் 4 சதவீதமாகும்.

தற்போதைய செம்பு விலை, உலகளாவிய வினியோக பலவீனத்தை பிரதிபலிக்கிறது. போக்குவரத்து மின்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தரவுத்தள மையங்களின் விரைவான வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் ஆகியவற்றால், செம்பின் தேவையில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும்.

துத்தநாகம்

து த்தநாகம் விலை, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு டன் 2,850 அமெரிக்கன் டாலர் என்ற நிலையில் இருந்து, தற்போது 2,965 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, லண்டன் மெட்டல் எக்சேஞ்ச் துத்தநாக கையிருப்பு 75 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 78,475 மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகளின் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

சீனாவின் சுத்திகரிக்கப்பட்ட துத்தநாக உற்பத்தி, ஆகஸ்டில் 23 சதவீதம் உயர்ந்து, 6.51 லட்சம் டன் அளவுக்கு சென்றுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்து 48 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us