தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சமூக பணிகளுக்கு ரூ.22,212 கோடி கம்பெனிகளின் செலவு தாராளம்

 சமூக பணிகளுக்கு ரூ.22,212 கோடி கம்பெனிகளின் செலவு தாராளம்

 சமூக பணிகளுக்கு ரூ.22,212 கோடி கம்பெனிகளின் செலவு தாராளம்


ADDED : ஏப் 21, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க டந்த 2024 - -25ம் நிதியாண்டில், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி ஒதுக்கீடு 22,212 கோடி ரூபாயாக, புதிய உச்சம் தொட்டது என, பங்குச்சந்தை தரவுகளை வழங்கும் 'பிரைம் டேட்டாபேஸ்' தெரிவித்துள்ளது.

ஆய்வறிக்கை கூறும் கூடுதல் விபரங்கள்:

 நிறுவன சட்டத்தின்படி, நிறுவனங்கள் தங்கள் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில், 2 சதவீதத்தை சமூக நலத்திட்டங்களுக்கு செலவிட வேண்டும்

 கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி லாபம் 22 சதவீதம் அதிகரித்ததால், சமூக பணிகளுக்கான நிதி ஒதுக்கீடும் தானாகவே உயர்ந்துள்ளது

 2019- - 20 முதல் 2022 - -23 வரை மாற்றமின்றி இருந்த செலவீனங்கள், 2023 - -24ல் 16 சதவீதம் உயர்ந்து, 18,011 கோடி ரூபாயை எட்டியது. தற்போது 2024 - -25ம் நிதியாண்டிலும் அந்த ஏறுமுகம் தொடர்கிறது

 மொத்தம் 1,549 நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்., பணிகளை செய்ய கட்டாயமாக்கப்பட்டன. இவற்றின் இலக்கு, 22,732 கோடி ரூபாய்; இதில், 22,212 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

 செலவிடப்படாத மீதி தொகை, எதிர்கால திட்டங்களுக்காக தனி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதுதான் இலக்கைவிட சற்றே குறைந்ததற்கு காரணம்

 அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., பங்களிப்பு 19 சதவீதம் உயர்ந்து 4,791 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

முன்னுரிமை துறைகள் வழக்கம் போலவே கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கே நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. 70 சதவீத நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட அதிக தொகையை இந்த துறை சார்ந்த சமூக பணிகளுக்காக வழங்கியுள்ளன. மாநில அளவில், தொழில்துறை அதிகம் வளர்ந்துள்ள மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள், இந்த நிதியால் அதிக பலன்களை பெற்றுள்ளன.



சி.எஸ்.ஆர்., செலவு - டாப் 5 நிறுவனங்கள் நிறுவனத்தின் பெயர் சி.எஸ்.ஆர்., செலவு (ரூ.கோடியில்) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,309.50 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 1,068.03 டி.சி.எஸ்., 960 ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 650 அதானி எண்டர்பிரைசஸ் 539



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us