தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தங்கம் வாங்க புதிய வசதி 'தன்' நிறுவனம் அறிமுகம்

 தங்கம் வாங்க புதிய வசதி 'தன்' நிறுவனம் அறிமுகம்

 தங்கம் வாங்க புதிய வசதி 'தன்' நிறுவனம் அறிமுகம்


ADDED : மே 01, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 02:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி று முதலீட்டாளர்கள் நேரடி சந்தை விலையில், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவதற்காக 'தன்' நிறுவனம் 'கோல்டு வால்ட்' எனும் புதிய வசதியை அறிமுகம் செய்து உள்ளது.

இந்த வசதியை 'தன்' செயலி வாயிலாக பயன்படுத்தலாம்.

முக்கிய விபரங்கள்:

* முதலீட்டாளர்கள், 'தன்' செயலியில், 'எம்.சி.எக்ஸ்.,' சந்தை வாயிலாக, புல்லியன் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளியை டெலிவரி எடுக்கலாம்

* இந்த வர்த்தகங்கள் செபி அமைப்பின் கீழ் வரும், 'எம்.சி.எக்ஸ்., மற்றும் அதன் கிளியரிங் பிரிவான எம்.சி.எக்ஸ்.சி.சி.எல்.,' ஆகிய ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும்

* எக்ஸ்சேஞ்ச் வாயிலாக நிர்ணயிக்கப்படும் விலையிலேயே, எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கலாம்

* வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான வால்ட்களில் சேமிக்கப்படும்

* தேவைப்பட்டால் முதலீட்டாளர்கள் இதை எப்போது வேண்டுமானாலும் தற்போதைய சந்தை விலைக்கு விற்கலாம் அல்லது குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் டெலிவரி பெறலாம்.

'கோல்டு வால்ட்ˆ' என்பது?



டிஜிட்டல் தளம் வாயிலாக, மிக சிறிய தொகையில்கூட தங்கத்தை வாங்குவதற்காக பயன்படுத்தப்படுத்தும் ஒரு வசதி ஆகும். நீங்கள் வாங்கும் டிஜிட்டல் தங்கத்திற்கு ஈடான 24 காரட் துாய தங்கம், விற்பனையாளரால் பாதுகாப்பான வால்ட்டில் உங்களுக்காக சேமிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us