தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.டி., துறை குறித்து குழப்பும் ஆய்வறிக்கைகள்: இப்போது முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

 ஐ.டி., துறை குறித்து குழப்பும் ஆய்வறிக்கைகள்: இப்போது முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

 ஐ.டி., துறை குறித்து குழப்பும் ஆய்வறிக்கைகள்: இப்போது முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?


UPDATED : பிப் 28, 2026 06:57 AM

ADDED : பிப் 28, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2026 06:57 AM ADDED : பிப் 28, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சிட்ரினி ரிசர்ச்' மற்றும் 'ஜெப்ரீஸ்' ஆகிய இரண்டு முக்கிய நிறுவனங்களும் ஐ.டி., துறையின் எதிர்காலம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிட்ரினி ரிசர்ச் நிறுவனத்தின் கணிப்பு


* 2028ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஐ.டி., சேவை துறை முற்றிலுமாக முடங்கும்

* டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்

* டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி., நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடுமையாக சரியும்

* 'ஏ.ஐ., கோடிங் ஏஜென்ட்கள்' புழக்கத்துக்கு வருவதால், வேலையிழப்புகள் அதிகரிக்கும்.

ஜெப்ரீஸ் நிறுவனத்தின் எச்சரிக்கை மணி


* ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி இனி மந்தமாகவே இருக்கும்

* ஐ.டி., பங்குகளின் இலக்கு விலை 33 சதவீதம் வரை குறையலாம்.

இந்த கணிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என கூறும் ஒரு தரப்பினர் தெரிவிப்பதாவது:

* ஏ.ஐ., தொழில்நுட்பம் வந்தாலும், நிறுவனங்களின் செயல்பாட்டு முறைகள் மாற பல ஆண்டுகள் ஆகும்

* தொழில்நுட்பம் என்பது வளர்ச்சிக்கு உதவும் கருவியே தவிர, மனித உழைப்பை முழுமையாக அழித்துவிடாது

* வேலையிழப்பு ஏற்பட்டால் அரசுகள், புதிய கொள்கைகள் வாயிலாக அவற்றை கட்டுப்படுத்தும்

* இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை வேகமாக தகவமைத்து வருகின்றன.

ஐ.டி., நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து இப்படி பல்வேறு செய்திகள் வந்தபடியே இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இப்படி மாறுபட்ட கருத்துகள் வெளிவந்து நம்மை குழப்பும்போது, இந்த சூழ்நிலையை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து 'பிரைம் இன்வெஸ்டார்' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீகாந்த் மீனாட்சி கூறியதாவது:

செய்தி, கருத்து ஆகிய இரண்டுக்குமே பங்குச் சந்தை எதிர்வினையாற்றும். ஆனால், இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் முதலீட்டாளர்கள் ஒரே மாதிரி நடந்துகொண்டால், இழப்பு அவர்களுக்குத்தான்.

செய்திகளினால் பங்குச்சந்தை அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அதாவது, நிறுவனங்கள் வெளியிடும் ஆய்வறிக்கைகளுக்கு பங்குச் சந்தையின் எதிர்வினை என்ன என்பதை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளுக்கு சந்தை தரும் எதிர்வினையை பொருட்படுத்த தேவையில்லை. அந்த கட்டுரைகளை சுவாரஸ்யத்துக்காக வேண்டுமானால் முதலீட்டாளர்கள் படித்துக் கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் ஐ.டி., துறையை பாதிக்கும் அல்லது பாதிப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் செய்திகளும், கருத்துகளும் மாறி மாறி வெளியாகி கொண்டிருக்கின்றன. இதை கூர்ந்து கவனித்து, உண்மை எது; மிகைப்படுத்தப்பட்ட தகவல் எது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்ய வேண்டிய விஷயங்கள்


1 ஐ.டி., துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள், அதன் பண்டு மேலாளர்களின் செயல்பாடுகளை மட்டும் அவ்வப்போது கவனித்து வாருங்கள். டென்ஷன், குழப்பம் வேண்டாம்

2 தரமான ஐ.டி., பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்பதற்காக, சந்தையின் சரிவில் கூடுதல் முதலீட்டை செய்யாதீர்கள்

3 ஏழு ஆண்டுகளுக்கு முன் ஐ.டி., துறை சார்ந்த பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள், லாபத்தை 50% முன்பதிவு செய்யலாம்

4 தங்களது நீண்டகால முதலீட்டு போர்ட்போலியோவில், லாபம் தராத ஐ.டி., பங்குகள் இருப்பின் அதை விற்று, லாபம் தரும் வேறு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள். மார்ச் மாதம் நெருங்குவதால், இப்படி செய்வ தன் வாயிலாக கிடைக்கும் வரிச்சலுகை பலன்களை அனுபவிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us